"மதில் மேல் பூனை".. ஓங்கியடித்த பாஜக.. அசராத எடப்பாடி பழனிசாமி.. அப்ப கூட்டணி? புதுவரவு "இவர்"தானா?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையிலும்கூட, சில அரசல்புரசல்கள் வெடித்தவாறே உள்ளன.. என்ன காரணம்? என்னதான் நடக்கிறது கூட்டணிக்குள்?
ஈரோடு தேர்தலின்போதிருந்து, அதிமுக - தமிழக பாஜக மோதல் வெடித்தபடியே உள்ளதாக தெரிகிறது.. 2 கட்சிகளின் 2ம் கட்ட தலைவர்கள், இன்றுவரை ஒருவரையொருவர் மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே, தன்னுடன் மோதல் போக்கை அண்ணாமலை கடைப்பிடித்து வருவதால்தான், எடப்பாடி பழனிசாமி, டெல்லி மேலிட தலைவர்களிடம், "மாநில தலைமையை மாற்றுங்கள்".. இல்லாவிட்டால் கூட்டணிக்குள் பிரச்சனை வந்துவிடும் என்று எடுத்துரைத்தபடியே இருந்தாலும்.. அதேபோல, பாஜகவுக்குள்ளேயே மேல்மட்ட தலைவர்களும் இதே பிரச்சனையை டெல்லிக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்..

துணிச்சல் முடிவு: இப்படி நாலாபக்கமும், புகார்கள் பறந்தாலும், டெல்லி மேலிடம் அண்ணாமலை விஷயத்தில் அமைதி காக்கவே செய்தது.. இப்போதுவரை அண்ணாமலை மீதான நன்மதிப்பு மேலிடத்துக்கு அபரிமிதமாகவே இருக்கவும் செய்கிறது.. எனினும், அதிமுகவுடனான கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை என்பதே அவரது ஒரே குறிக்கோளாக இருந்து வருகிறது.. தனித்து போட்டியிடுவோம், அப்போதுதான் நமது பலம் தெரியும் என்ற துணிச்சல் முடிவையும் அண்ணாமலை முன்வைத்து வருகிறார்..
சுருக்கமாக சொல்லப்போனால், தமிழக பாஜக தலைமையிலான, அதாவது தன்னுடைய தலைமையிலான கூட்டணி அமைவதையே அவர் பெரிதும் விரும்பவதாகவும், அதனாலேயே அதிமுக மீதான அதிருப்தியை தொடர்ந்து மறைமுகமாக எதிர்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், அமித்ஷாவுடன் 2 நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
இந்த கூட்டத்திலேயே, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிசெய்துவிட வேண்டும் என்று அமித்ஷா தரப்பில் நினைத்தார்களாம்.
ஆனால், இப்போதைக்கு கூட்டணி உறுதி குறித்து பேச வேண்டாம், நவம்பர், டிசம்பர் மாதத்துக்கு பிறகு உறுதிப்படுத்தி கொள்ளலாம் என்று அண்ணாமலை தரப்பில் சொல்லப்பட்டதாம்..
கூட்டணி விரிசல்: ஆக, அதிமுக - பாஜக கூட்டணி உறுதிப்படுத்தினாலும்கூட, அகில இந்திய அளவில்தான் அது உறுதியாகி உள்ளதே தவிர, மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லை என்றே தெரிகிறது. அதுமட்டுமல்ல, மேலும், 3வது அணியாக அதிமுக களமிறங்கட்டுமே என்ற எண்ணமும் தமிழக பாஜக தலைமைக்கு இருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
எப்படி பார்த்தாலும், தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணிக்குள் இணக்கமான போக்கு ஏற்பட்டே ஆக வேண்டியிருக்கிறது.. இந்த இணக்கம் ஏற்படவேண்டுமானால், அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. அப்படி அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும் என்பது அடிப்படையான விஷயம்.. இதுவரை அப்படியான நிகழ்வு எதுவுமே நடக்கவில்லை என்பதால், உறுதிப்படுத்தப்பட்ட கூட்டணியாக கருத முடியவில்லை.
வைத்திலிங்கம்: இதேபோன்ற அதிருப்தி அதிமுக தலைமைக்கும் உள்ளது.. கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்ஸூக்கு விடுக்கப்படாத நிலையில், தெம்பாக இருந்தது எடப்பாடி தரப்பு.
ஆனால், மறுநாளே ரவீந்திரநாத்துக்கு அழைப்பு சென்றதுமே கடுப்பாகிவிட்டதாம். இதற்கு நடுவில், ஓபிஎஸ்ஸூக்கு பக்கபலமாக இப்போதுவரை திகழ்ந்து கொண்டிருக்கும் மூத்த தலைவர் வைத்திலிங்கத்தையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை எடப்பாடி தரப்பு மறுபடியும் துவங்கியிருக்கிறதாம்.
இன்னொரு பக்கம் பாமகவையும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி நடக்கிறதாம்.. பாமக இல்லாவிட்டால் இந்த முறை வடமாவட்டங்களில் திமுகவை முந்த முடியாது என்பதால், வழக்கம்போல் தேமுதிகவை வெளியே தள்ளிவிட்டு, பாமகவை உள்ளே கொண்டுவர அதிமுக தரப்பு காய்நகர்த்தலை துவங்கி உள்ளதாம்.
ஆனால், ஓபிஎஸ் மற்றும் தினகரன் தரப்போ தங்கள் வாக்குகளை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டார்களாம்.. இவர்கள் 2 பேருமே எப்போது கூப்பிட்டாலும், தங்களுடன் கை கோர்ப்பார்கள் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இருக்கிறது.. ஆனாலும், இப்போதைக்கு இவர்களுடன் கூட்டணி குறித்து உறுதி தர வேண்டாம், அவர்களாகவே "எழுந்து" நின்று பலத்தை நிரூபிக்கட்டும், பிறகு பார்த்து கொள்ளலாம் என்று மேலிடம் நினைக்கிறதாம்..
க்ளைமேக்ஸ்: ஆக, பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? 3வது அணி நிஜமாகவே அமைய போகிறதா? அதிமுக - பாஜக இணக்கமாக களமிறங்குமா? ஓபிஎஸ், தினகரன் இருவரும் என்ன செய்ய போகிறார்கள்? இதெல்லாம் விடைதெரியாத கேள்விகளாகவே எஞ்சி நிற்கின்றன.. அடுத்து என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications