சுதீஷ்ஷே சொல்லிட்டாரே.. அங்க திமுகவுக்கு "கேட்டுச்சா".. படக்குனு மாறுதே "கிளைமேட்".. அப்ப எடப்பாடி?
விஜயகாந்தின் தேமுதிக சார்பாக, சுதீஷ், விஜயபிரபாகரன் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்தனர்
ஈரோடு: முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து தேமுதிகவின் சுதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.. அத்துடன் தேமுதிக பிரச்சாரம் ஈரோட்டில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக்கட்ட சூடுபிடித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மணல் மேடுபகுதியில் இருந்து சூரம்பட்டி நான்குரோடு பகுதியில் வரை தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விஜயபிரபாகரன்
அவருடன் இணைந்து விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும் பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்... சுதீஷ் மற்றும் விஜயபிரபாகரன் இணைந்து மேளதாளங்கள் முழங்க வீதிவீதியாய் நடந்து சென்று கொட்டுமுரசு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.. இந்த வாக்கு சேகரிப்பில் சிறுமிகள், இளம்பெண்கள், விஜயகாந்த்தின் போட்டோ உள்ள மாஸ்க்கை அணிந்து வலம் வந்தது மக்களை கவர்ந்தது.. பின்னர் அங்கிருக்கும் மீன் கடைகளுக்கு சென்று, மீன் விற்பனை செய்து, விஜயபிரபாகரனும், சுதீஷும் வாக்கு சேகரித்தனர்.. அப்போது சில மீன்களை, ஒரு கேரிப்பையில் ஓனர் வைத்து கொடுத்தார்..

விஜயகாந்த்
அதற்கு விஜயபிரபாகரன், பிளாஸ்டிக் பை தடை செய்யப்பட்டுள்ளது, பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்று மீன்கடைக்காரரிடம் கேட்டுக் கொண்டார். அந்த வழியாக ஒரு பாட்டி வந்து கொண்டிருந்தார்.. அவருக்கு விஜயபிரபாகரன் தண்ணீர் பிடித்து கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.. பின்னர் விஜயபிரபாகரன் தொகுதி மக்களிடம் பேசும்போது, "விஜயகாந்த் உங்களின் சொத்து.. அவர் வந்தால் தங்கதட்டில் வைத்து மக்களை நான் பார்த்து கொள்வேன்.. நீங்கள் முரசு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். விரைவில் அவர்நலமுடன் எழுந்து வந்து உங்களை சந்திப்பார் என்று உருக்கமாக கூறினார்..

சுதீஷ்ஷா
இதையடுத்து சுதீஷ் பேசும்போது, தேமுதிக வேட்பாளர் இதே பகுதியை சேர்ந்தவர்தான்.. இந்த பகுதி மக்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாமே அவருக்கும் இருக்கிறது.. அதனால் நல்ல முறையில் செயல்படுவார்.. ஆனால் எதிர்தரப்பில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் இருக்கிறார்.. வெற்றி பெற்றால் அவரால் இங்கு வரவே முடியாது.. என்னை பொறுத்தவரை 2024 எம்பி தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிடுவார்.. அதனால் எப்படியும் இந்த பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்ய நேரிடும்..

மீசை ஆண்மகன்
அப்படி ராஜினாமா செய்தால், மறுபடியும் ஒரு இடைத்தேர்தல் இங்கு உருவாகும்.. அதனால் அதற்கெல்லாம் நீங்கள் வாய்ப்பு தர வேண்டாம்.. முரசு சின்னத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.. 18 வருடங்களில் 50 இடைத்தேர்தல்களை நாங்கள் பார்த்துவிட்டோம்.. இப்படி ஒரு மோசமான இடைத்தேர்தலை சந்தித்தது கிடையாது.. முதலமைச்சர் முக ஸ்டாலினை, எடப்பாடி பழனிசாமி எப்படி விமர்சனம் செய்தார் என்று தெரியவில்லை.. வேட்டி கட்டிய ஆண் மகனா? மீசை வைத்த ஆண் மகனா? என்றெல்லாம் பேசி இருந்தால் அது கண்டிப்பாக தவறுதான் என்றார் சுதீஷ்..

விஜயகாந்த் மனசு
இந்த முறை இடைத்தேர்தலில் தேமுதிகவை பொறுத்தவரை, களத்தில் போட்டியிடுமா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.. காரணம், அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும்நிலையில், வரும் எம்பி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முயற்சிப்பதாகவும், வலுவிழந்து போயுள்ள தேமுதிக, வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால் தான், கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல்முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று அக்கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறதாம்.. மேலும், தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் அக்கட்சிக்கும் வரப்போகும் தேர்தல் ஒரு சவாலாக அமையும் என்கிறார்கள்..

சஸ்பென்ஸ்
ஆனால், கூட்டணி குறித்து இதுவரை விஜயகாந்த் தரப்பும், திமுக தரப்பும் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், இந்த இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாமல், திமுக தரப்புக்கு ஆதரவு தரலாம் என்றார்கள்.. ஆனால் இதற்கு நடுவில், தேமுதிகவின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி தரப்பு கேட்டதாக ஒரு தகவல் பரவியது.. ஆனால், சுதீஷ் இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார்.. அத்துடன், சூட்டோடு சூடாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி அன்றைய தினமே இடைத்தேர்தல் வேட்பாளரையும் அறிவித்தும் விட்டது தேமுதிக.. வரும் எம்பி தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஸ்டாலின் குறித்து எடப்பாடி பேசியது கண்டிக்கத்தக்கது என்று சுதீஷ் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது..!!!

துண்டு சேருதோ
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி, முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசியுள்ளார்.. பாமகவும், திமுக கூட்டணியில் இடம்பெற விரும்புவதாக சில மாதங்களாகவே செய்திகள் கசிந்து வரும்நிலையில், இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலினை அன்புமணி, சந்தித்து பேசியிருந்தார்.. பின்னர் செய்தியாளர்களிடம் இதை பற்றி சொல்லும்போது, "வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து முதல்வரை இன்று சந்தித்தோம்.. போதைப் பொருள் தொடர்பாக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியர், காவலர்களுடன் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.. வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு விழா நிகழ்ச்சி நடத்துவது குறித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம்" என்று கூறியிருந்தார். எனினும் பாமகவின் அணுகுமுறையை தேமுதிகவும் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications