லுங்கியை மடித்து கட்டி.. நாசூக்காக "தள்ளி" கொண்டு போன இளைஞர்.. சிசிடிவி கேமராவில் பரபரப்பு காட்சி!
சைக்கிளை திருடி செல்லும் நபரின் வீடியோ வைரலாகி வருகிறது
Subscribe to Oneindia Tamil
Recommended Video
வீட்டுக்குள் புகுந்து சைக்கிளை திருடிச்செல்லும் நபர்..சிசிடிவி வீடியோ
ஈரோடு: சைக்கிளை தள்ளிட்டு போவார்கள் என்பார்களே.. அதுதான் இது.. சைக்கிளையே ஆட்டைய போட்டு விட்டு.. தள்ளி கொண்டு போயுள்ளார் ஒரு நபர்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரது வீட்டின் முன்புதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 24-ஆம் தேதி... காலை 9.30 மணிக்கு ஒருவர் ஒரு வீட்டிற்குள் நுழைகிறார். என்னமோ அவருடைய சொந்த வீடு மாதிரி அந்த பெரிய கேட்டை திறந்து கொண்டு வருகிறார். சுற்றி இருந்த வண்டிகளை ஒரு லுக் விடுகிறார்.

நம்மை யாராவது பார்க்கிறார்களா, அங்கே யாராவது நிற்கிறார்களா என்றெல்லாம் அவர் கண்டுக்கவே இல்லை. கேட் திறந்து உள்ளே வந்ததும், லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு கார் பக்கத்தில் நின்றிருந்த சைக்கிளை லாவகமாக நகர்த்தி வெளியே தள்ளி கொண்டு போகிறார்.

சைக்கிளை திருடிக் கொண்டு போகும்போது, மறக்காமல் கேட்-ஐ மூடிவிட்டு போகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த காட்சி அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இவர் யார் என்று தெரியவில்லை. கொஞ்சமும் பதட்டம், பயம், பரபரப்பு இல்லாமல் இந்த திருட்டை நாசூக்காக செய்துள்ளார்.
இந்தக் காட்சிகளைக் கொண்டு போலீசில் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர் புகார் அளித்துள்ளார். இதுபோக வாட்ஸ்அப்பிலும் சைக்கிள் திருடும் காட்சியை பதிவிட்டு, அந்த நபர் யாராக இருக்கும் என்று வலைவீசி தேடி வருகிறார்.












Click it and Unblock the Notifications