மாடு ஒத்துக்கல போல.. உலகமே சிரிக்குது.. Cow Hug Dayவை கலாய்த்த கார்த்தி சிதம்பரம்.. திரும்பும் பாஜக
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில் அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான், Cow Hug Day பற்றிய கேள்விக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ‛‛உலகமே பார்த்து சிரிக்குது.. இந்த நாளை கொண்டாட மாடு ஒத்துக்கல போல'' எனக்கூறி தொடர்ந்து சில கருத்துகளை தெரிவித்து மத்திய அரசை கலாய்த்ததை பாஜகவினர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய விலங்குகள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 3 நாட்களுக்கு முன்பு விலங்குகள் நலவாரியம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது.
அதில் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்றைய தினம் பசு விரும்பிகள் பசு அரவணைப்பு தினமாக(Cow Hug Day)கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியது.

மகிழ்ச்சி அதிகரிக்கும்
இதுதொடர்பாக இந்திய விலங்குகள் நலவாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛ இந்திய கலாசாரம், கிராமப்புறங்களின் பொருளாதாரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மனிதர்களுக்கு எல்லா செல்வங்களையும் அளிப்பதோடு, தாயை போல் பசு உள்ளது. மேற்கத்திய கலாசாரத்தால் சில வேதமரபுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய கலாசாரத்தால் நமது கலாசாரம், பாரம்பரியம் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது. பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். இதனால் பசுவிரும்பிகள் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற பிப்ரவரி 14ம் தேதியை பசு அரவணைப்பு தினமாக (Cow Hug Day) கொண்டாட வேண்டும்'' என தெரிவித்து இருந்தது.

மகிழ்ச்சி அதிகரிக்கும்
இதுதொடர்பாக இந்திய விலங்குகள் நலவாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛ இந்திய கலாசாரம், கிராமப்புறங்களின் பொருளாதாராரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மனிதர்களுக்கு எல்லா செல்வங்களையும் அளிப்பதோடு, தாயை போல் பசு உள்ளது. மேற்கத்திய கலாசாரத்தால் சில வேதமரபுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய கலாசாரத்தால் நமது கலாசாரம், பாரம்பரியம் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது. பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். இதனால் பசுவிரும்பிகள் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற பிப்ரவரி 14ம் தேதியை பசு அரவணைப்பு தினமாக (Cow Hug Day) கொண்டாட வேண்டும்'' என தெரிவித்து இருந்து.

திரும்ப பெறப்பட்ட அறிவிப்பு
பசு அரவணைப்பு தினம் என்பது பசுக்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இணையதளங்களில் இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் திடீரென்று நேற்று இந்திய விலங்குகள் நலவாரியம் அறிவிப்பை திரும்ப பெறுவதாக கூறியது.

கார்த்தி சிதம்பரம் எம்பி கருத்து
இந்நிலையில் தான் இன்று ஈரோட்டில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியாவில் பிப்ரவரி 14ம் தேதியை பசு அரவணைப்பு தினமாக அறிவித்தது பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கார்த்தி சிதம்பரம் மத்திய அரசை கலாய்த்து பதிலளித்தார்.

உலகமே சிரிக்குது
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்த தினம் கொண்டாடுவது தொடர்பாக மாடுகளிடம் சம்மதம் கேட்காமல் சொல்லிவிட்டனர் என நினைக்கிறேன்.முதலில் மாட்டிடம் சம்மதம் கேட்ட பிறகு அறிவித்து இருந்தால் இதனை பின்பற்ற கூறியிருப்பார்கள் என நினைக்கிறேன். தற்போது மாட்டிடம் சம்மதம் வாங்க முடியவில்லை என நினைக்கிறேன். இதனால் திரும்ப பெற்றுவிட்டனர். இந்த அரசாங்கத்தை என்ன சொல்வது?. ஒரு அரசாங்க அதிகாரி இத்தகைய வெளியீட்டை வெளியிடுகிறார். உலகமே நம்மை பார்த்து சிரிக்கிறது'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications