லிட்டர்கணக்கில்.. பாலை நடுரோட்டில் கொட்டி.. ஆவின் VS பால் உற்பத்தியாளர்கள்.. என்னதான் நடக்குது?
பாலுக்கு ஊக்குத் தொகை வழங்ககோரி ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பால் உற்பத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்
ஈரோடு: பால் உற்பத்தி விவசாயிகளுடன் தமிழ்நாடு அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சில இடங்களில் பாலை ரோட்டில் கொட்டியும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. இதில் ஆவின் நிறுவனம் 36 லட்சம் லிட்டர் பாலைதான் கொள்முதல் செய்கிறது. இதற்கு முன்னர் இருந்த அதிமுக ஆட்சியில் 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டதாக பால் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஆக இதுதான் இவர்கள் மத்தியில் எழுந்த முதல் அதிருப்தி. இரண்டாவதாக கொள்முதல் விலை. சரி பாலைதான் குறைவாக கொள்முதல் செய்கிறீர்களே கொள்முதல் விலையையாவது தனியாருக்கு சமமாக கொடுங்கள் என்று கொரிக்கை வைத்தனர்.
மனு எழுதி, கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தி, ஆர்பாட்டம் நடத்தி, அது போராட்டமாக உருவம் பெற்று கடைசியாக வேலை நிறுத்தத்தில் பால் உற்பத்தியாளர்கள் இறங்கியுள்ளனர். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் ஆவினுக்கு பால் தர மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பால் உற்பத்தியாளர் சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் உற்பத்தியாளர்கள் சில கோரிக்கைகளை கறாராக வைத்தனர்.

ஊக்கத்தொகை
அதாவது தனியார் நிறுவனங்கள் பசும்பாலுக்கு ரூ.42-45, எருமை பாலுக்கு ரூ.65 என கொடுக்கின்றனர். ஆனால் ஆவின் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.32, எருமை பாலுக்கு ரூ.42 மட்டுமே வழங்குகிறது. எனவே ஆவினில் பால் விநியோகிக்கும் எங்களுக்கு 7 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒருவேளை ஆவின் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தால் எல்லா பால் உற்பத்தியாளர்களும் தனியாரை நோக்கி நகர்வார்கள். பின்னர் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிடும். இதற்காக ஆவினை பலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் கூறியிருந்தனர்.

ஆவின்
மேலும், ஆவினில் இருக்கும் கட்டமைப்பை போல தனியாரிடம் அடிப்படை கட்டமைப்புகள் கிடையாது என்றும் உற்பத்தியாளர்கள் விளக்கியுள்ளனர். ஆவின் நிறுவனமானது தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிங்கள் மற்றும் கடைசியாக இணையம் என மூன்று அடுக்குகளாக செயல்படுகிறது. இதில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் கிராமங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்கின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 9,376 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கை தனியார் வசம் கிடையாது. ஆனால் இப்படி இருந்தும் குறைவான அளவில், குறைவான விலையில் பால் கொள்முதல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சங்கத்தின் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்னர்.

பால் உற்பத்தி
இதுதான் பால் உற்பதி செய்யும் விவசாயிகளின் கோரிக்கை. ஆனால், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் அரசு இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நாளை முதல் திட்டமிட்டபடி பால் விநியோக நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் நாளை முதல் விநியோகிக்க மாட்டோம் என்றும் எனவே சுமார் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் தடைபடும் என்றும் சங்கத்தினர் எச்சரித்தனர். அதன்படி இன்று போராட்டம் தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் ராயபாளையம் கூட்டுறவு சங்கம் முன்பு பாலை ரோட்டி கொட்டி தங்களது எதிர்ப்பை பால் உற்பத்தி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பால் தட்டுப்பாடு
ஏற்கெனவே மாலை நேரங்களில் ஆவின் பால் கிடைப்பதில்லை. அதேபோல விழா நாட்களிலும் முகுர்த்த நாட்களிலும் ஆவின் பால் போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது ஆவினுக்கு பால் உற்பத்தியாளர்கள் பால் அனுப்பாமல் இருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications