ஈரோட்டுக்கு ஆற்றிலேயே வர்றேன்.. படக்குனு காவிரியில் குதித்த கந்தசாமி.. இதுவரை ஆளையே காணோமே..?
ஈரோடு: ஈரோட்டில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து அப்பகுதி மக்கள் மீளவில்லை.. யாரிந்த கந்தசாமி? நேற்று என்ன நடந்தது இவருக்கு?
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளில் இருந்து 2 லட்சத்து 15 கனஅடி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த 2 தினங்களாகவே உயர்ந்துள்ளது..

நீர்வரத்து: அந்தவகையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, நேற்றைய தினம் 1,70,500 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து 1,70,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது... அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
இதன்காரணமாக, இங்குள்ள புதுப்பாலம் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது... அதேபோல, மேட்டூர் காவிரி பாலத்தில் இலகுரக வாகனங்கள், டூவீலர்களும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர்-இடைப்பாடி சாலை மூடப்பட்டு, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது... பவானி பகுதிகளில் கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, அவர்களும் அங்கிருந்து உடைமைகளுடன் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டார்கள்.
ஈரோடு: அந்த அளவுக்கு காவிரியில் நீர் வரத்து சீறி பாய்ந்து கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில் ஒரு துயர சம்பவமும் நடந்துள்ளது.. ஈரோடு மாவட்டம் பவானி, அம்மாபேட்டை அருகே செம்படாபாளையம் ஏரங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி .. 50 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி... அத்துடன், பந்தல் போடும் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள், மகன் ஆகியோர் உள்ளனர்...
கந்தசாமிக்கு சர்க்கரை வியாதி கடுமையாக இருந்து வந்துள்ளது.. இதனால், பதற்றம் மற்றும் படபடப்பு காரணங்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகிவிடுவதாகவும், சரிவர தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்றும் மனைவியிடம் சொல்லி வந்துள்ளார் கந்தசாமி.
காவிரி ஆறு: இந்நிலையில், ஈரோட்டில் வசித்து வரும் இவரது மகள் சாந்தி, நேற்றைய தினம் கந்தசாமிக்கு போன் செய்து பேசியிருக்கிறார்.. அப்போது, "மெடிக்கல் செக்கப்புக்கு ஏன் வரவில்லை? என்று கேட்டுள்ளார். அதற்கு கந்தசாமி, "இதோ வருகிறேன்.. நான் காவிரி ஆற்றிலேயே ஈரோடு வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, போனை துண்டித்துவிட்டார். இதனால் பதறிப்போன அந்த பெண், தொடர்ந்து போனில் முயற்சித்தும் கந்தசாமியிடம் பேசமுடியவில்லை.
ஆனால், போனை துண்டித்ததுமே, கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையத்திற்கு சென்ற கந்தசாமி, அங்கிருந்த பாலத்தில் விறுவிறுவென ஏறி, காவிரி ஆற்றில் திடீரென குதித்து விட்டார்... நேற்றுமுன்தினம்தான், காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதால், அந்த வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.. ஆனால், பொதுமக்கள் முன்னிலையிலேயே கந்தசாமி ஆற்றில் குதித்துவிட்டார்..
பரபரப்பு: ஆற்றில் விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் ஓடிய நிலையில், குதித்த வேகத்தில் தண்ணீரில் மூழ்கிய கந்தசாமி, அதே வேகத்தில் அடித்து செல்லப்பட்டதில் மாயமாகிவிட்டார்.. இதை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் பதறி துடித்தார்கள்.. உடனடியாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. கந்தசாமியை காணாமல் குடும்பத்தினர் கதறி அழுது வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications