Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டு பட்டென.. தொண்டரை அடித்த சீமான்.. அப்படியே பார்த்த போலீஸ்காரர்.. கடைசிவரை "உஷ்ணம்" குறையாத நாதக

சீமானின் பிரச்சாரம் காரசாரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆனதை மறுக்க முடியாது.. சீமானின் சரவெடிகள் எல்லாமே வாக்குகளாக அக்கட்சிக்கு மாறக்கூடுமோ? என்ற எதிர்பார்ப்புகளை அவரது பிரச்சார நெடி ஏற்படுத்திவிட்டு போயுள்ளது..!!!

ஒவ்வொரு தேர்தலிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளையும் பிரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது நாம் தமிழர் கட்சி.. திமுகவே நேரடியாக இறங்கி போட்டியிட்டாலும், நாம் தமிழர் இங்கு ஒரு கை பார்த்துவிடும் என்றார்கள்.

அந்த அளவுக்கு நாம் தமிழர் கட்சி தீவிரத்துடன் இந்த இடைத்தேர்தலை எதிர்கொண்டது... இந்த முறை இடைத்தேர்தலில் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் மற்றும் பாஜகவின் அதிருப்தி ஓட்டுக்களை பெறுவதிலும் முழுவீச்சில் இறங்கியது.

 காரம் + வீர்யம்

காரம் + வீர்யம்

இதைதவிர, சிறுபான்மையினர் வாக்குகளை பெற முயல்வதுடன், பாஜக மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை, அதிமுக பக்கம் செல்லாமல் நாம் தமிழர் கட்சிக்கே அறுவடை செய்யும் முயற்சியாகவும் சீமானின் பிரச்சார பேச்சுக்கள் பார்க்கப்பட்டும் வருகின்றன... சீமான் நினைத்தால், இந்த இடைத்தேர்தலில் 3ம் இடத்தில் இருந்து, 2ம் இடத்தைகூட எட்டிப்பிடித்துவிட முடியும் என்று அரசியல் விமர்சகர்களே, கருத்து சொல்லும் அளவுக்கு சீமானின் பிரச்சாரம் வீர்யம் நிறைந்ததாகவே காணப்பட்டு வருகிறது.. ஒருபக்கம் சிறுபான்மையினர் ஓட்டுக்கள், மற்றொருபக்கம், திமுக, பாஜக அதிருப்தி ஓட்டுக்கள், இதற்கு நடுவில் இளைஞர்கள் என மொத்த பேரையும் தன்பக்கம் திருப்பும் அளவுக்கு சீமானின் பேச்சுக்கள் காரமும் வீர்யமும் நிறைந்து காணப்பட்டதை மறுக்க முடியாது.

 உடைந்த மண்டை

உடைந்த மண்டை

ஆனால், திடீரென அருந்ததியர்களுக்கு எதிராக சீமான் பேசியதாக சர்ச்சை கிளம்பிவிட்டது... இது அக்கட்சிக்கு மிகப்பெரிய மைனஸாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.. அருந்ததியினர் சமுதாயத்தை மக்கள் சீமான் மீது அதிருப்தி கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் புகாரும் அளித்தனர்... மேலும், திமுகவுடன் மோதலாகி, மண்டை உடைந்து, சலசலப்புகள் கிளம்பின.. வழக்குகள், புகார்கள், மண்டைஉடைப்பு, என கடைசிகட்ட நிகழ்வுகள் களத்தில் சீமானின் வாக்குகளை பதம் பார்க்கும் வகையில் அமைந்து விட்டதாக சொல்கிறார்கள்.

 சேகரிப்பு

சேகரிப்பு

கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட, ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் சீமான்.. 16ம் நம்பர் ரோடு, தெப்பக்குளம் வீதியில் சீமானின் பிரச்சார வாகனம் சென்றபோது, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென திமுகவினர் மீது நாம் தமிழர் கட்சியினர் கல்வீசி தாக்கியதுடன், அவர்களை தடுக்க வந்த போலீசாரையும் தாக்கியுள்ளனர்.. இதில் 13 பேரும் படுகாயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

 பட்டு..பட்டென

பட்டு..பட்டென

7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியினரிடம் போலீசார் விசாரித்தனர்.. அப்போது அங்கு சீமானும் இருந்தார். அப்போது போலீசார் கேட்ட கேள்விக்கு சீமான் பதில் சொன்னார்.. உடனே கட்சி தொண்டர் ஒருவரும் செல்போனில் பேசிகொண்டே பதில் சொன்னார்.. போலீஸ் கேட்ட கேள்விக்கு இருவருமே மாறி மாறி பதில்சொன்னார்கள்.. இதனால், போலீசார், யாராவது ஒருத்தர் பதில் சொல்லுங்கள் என்றார்.. அப்போது, அருகிலிருந்த தொண்டரை சீமான், பட்டு.. பட்டென கையில் அடித்தார்..

 தம்பிகள் யார்

தம்பிகள் யார்

இந்த வீடியோவை இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.. இதைவைத்து விமர்சனங்களையும் எதிர் கருத்துக்களையும் அள்ளி வீசிகொண்டிருக்கிறார்கள். வழக்கமாக சீமான், அனைவரிடம் எளிமையாகவும் இயல்பாகவும் பேசக்கூடியவர்.. எங்கே யாரை பற்றி பேசினாலும் அவர்களின் பெயர்களை மட்டும் சொல்லாமல், "அண்ணன், அப்பா, தம்பி, தங்கச்சி" அழைத்து உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் தருபவர்.. அதிலும் தன் கட்சியை சார்ந்தவர்களையும் தம்பி, தங்கை என்றே அழைத்து பாசத்தை இழையோட விடுபவர்.. சிலசமயம் அவர்களை கண்டிக்கக்கூடியவர்.. அவர்களுக்கு அறிவுரை சொல்லக்கூடியவர்.

 சீமான் தம்பிகள்

சீமான் தம்பிகள்

அந்தவகையில்தான் இந்த நிகழ்விலும் நடந்து கொண்டுள்ளார்.. அளவுகடந்த உரிமை காரணமாக, தன்னுடைய தம்பியின் தலையில் லேசாக தட்டியதை எல்லாம் ஒரு வீடியோவாக வெளியிட்டு விமர்சிப்பதா? என்று சிலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.. அப்படி பார்த்தால், சீனியர் அமைச்சர்கள், தங்கள் தொண்டர்களை தாக்கிய வீடியோவும் வெளியாகியிருந்ததே?.. இதெல்லாம் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்படுவது.. களத்தில் இளைஞர்களின் ஆதரவு, நாம் தமிழர் கட்சிக்கு அபரிமிதமாக பெருகி வருவதால் இதெல்லாம் பொறுத்து கொள்ள முடியாமல், எதிர்க்கட்சிகள் இப்படியான விஷயங்களை பரப்பி வருகிறார்கள் என்கிறார்கள் சீமானின் தம்பிகள்..!

 மேனகா மேனகா

மேனகா மேனகா

நேற்று முன்தினமும் ஈரோடு சம்பத்நகர், காளைமாட்டு சிலை அருகில், பன்னீர் செல்வம் பார்க் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரச்சாரம் செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் பிரச்சாரத்துக்கு அனுமதி வாங்கினீர்களா? என்று கேட்டனர். மேலும், பிரச்சாரம் செய்த நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் 40 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே வேட்பாளர் மேனகா நவநீதன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்..

 சீமான் தம்பிகள்

சீமான் தம்பிகள்

உடனே போலீசார், அனுமதி வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தாலும், சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தால் அங்கு பிரசாரம் செய்யக் கூடாது என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.. நேற்றைய தினம் கடைசி நாள் பிரச்சாரம் என்பதால், வழக்கம்போல் சீமானின் பேச்சை கேட்க மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தனர்.. இந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. ஆக, வீர்யமிக்க பிரச்சாரங்களை முன்வைத்து, சாலை வசதி, குடிநீர் வசதி, டாஸ்மாக் அகற்றம், பெண்கள் பாதுகாப்பு போன்ற மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய விஷயங்களையும் கையில் எடுத்து, மக்களிடம் எளிமையாக ஓட்டுக்களை கேட்டு முடித்துள்ளது நாம் தமிழர் கட்சி. இவைஎல்லாம் வாக்குகளாக மாறுமா என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+