Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நட்டாற்றில் விடப்பட்ட நாஞ்சில் சம்பத்! விஜய் ஈரோடு கூட்டத்தை பார்த்தீங்களா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு பொதுக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் இருந்த நிலையில் நாஞ்சில் சம்பத்தை பார்த்தீர்களா? நட்டாற்றில் விடப்பட்டுவிட்டார்?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில், விஜயமங்கலம் பகுதியில் உள்ள சரளையில் தவெக பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்திருந்தார்.

nanjil sampath vijay tvk

இந்த கூட்டத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக் கூட்ட மைதானத்திற்கு வந்தார்.

அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் பிரச்சார வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் துரத்திக் கொண்டு வந்தனர்.

இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில், "பெரியார் பிறந்த மண்ணிற்கு விஜய் வருகை தந்துள்ளார். ரூ.500 கோடி வருமானத்தை உதறிவிட்டு, மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார். வரலாறு படைக்க பெருந்திரளாக கூட்டம் கூடியுள்ளது. இதற்கு முன் புரட்சித்தலைவரைப் பார்த்தேன். இன்றைக்கு புரட்சி தளபதி விஜய்யை காண்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

அது போல் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பேசியிருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்தை காணவில்லை. சரி அவர் விஜய்க்கு முன்பு பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது புஸ்ஸி ஆனந்த் பேசியதும் விஜய் வந்துவிட்டார்.

விஜய் கடைசியாக பேசுகையில், "செங்கோட்டையன் அண்ணன் தவெகவுக்கு வந்தது மகிழ்ச்சியான விஷயம். அவரை போன்று இன்னும் நிறைய பேர் வருவார்கள்" என கூறியிருந்தார். அப்போதாவது நாஞ்சில் சம்பத் பெயரை விஜய் சொல்லி அவரை அறிமுகப்படுத்தியிருக்கலாம். அவரை பாராட்டி பேசவில்லை என்றாலும் அவர் பெயரையாவது விஜய் குறிப்பிட்டிருக்கிறார். தவெகவில் கடைசியாக இணைந்த திராவிட பேச்சாளர் என்ற முறையிலாவது விஜய் இதை செய்திருக்கலாம்.

ஆனால் அவர் பெயரை கூட விஜய் குறிப்பிடவில்லை. தவெகவில் இணைந்த போது நாஞ்சில் சம்பத், திமுகவில் சைக்கிள் கூட வாங்கித் தரமாட்டார்கள். என்னை காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் அறிவாலயத்தினர் வசைபாடினர். என்னை அறிவுத் திருவிழாவுக்கு அழைக்கவில்லை. திமுக மேடைகளில் என்னை அசிங்கப்படுத்தியுள்ளனர். இதை சுப.வீ.யும், கரு பழனியப்பனும் செய்திருந்தனர்" என்றெல்லாம் பேசிய அவர், "விஜய் எனது ரசிகர்" என கூறியதை கேட்டதும் நான் பூரித்து போனேன். இதைவிட வேறு என்ன வேண்டும்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது மரியாதை இல்லாததால்தான் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து தவெகவில் இணைந்தார். ஆனால் அங்கு அவரது பெயரை கூட சொல்ல விஜய்க்கு மனம் வரவில்லை.

இது சமூகவலைதளத்தில் பேசு பொருளாகியுள்ளது. செங்கோட்டையன் இணைந்த போது ட்விட்டரில் அவரை பற்றி பெருமையாக பேசி வீடியோ போட்டார் விஜய். அது போல் நாஞ்சில் சம்பத் இணைந்த போது அப்படி எதையும் அவர் செய்யவில்லை. இதனால் நாஞ்சில் சம்பத்திற்கு தவெகவிலும் மரியாதை இல்லை என பலர் கூறி வருகிறார்கள்.

தவெகவில் நாஞ்சில் சம்பத் கொள்கை பரப்பு செயலாளராக இணைந்துள்ளார். அவருக்கு இந்த கூட்டத்திற்கு அழைப்புக் கூட விடுக்கப்படவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+