உதயநிதி முதல் சீமான் வரை.. ஈரோட்டை மொத்தமாக முற்றுகையிடும் தலைவர்கள்.. பக்கா வியூகம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் முதல் சீமான் வரை தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இதேபோல் அதிமுக கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது, இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுப்பட உள்ளார். அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி., மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், வைகோ, மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

பிரச்சார விவரம்
வரும் 19ம் , 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அவரது சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:- சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சம்பத் நகர், மாணிக்கம்பாளையம் கவுசிங் யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு, சூளை, குளம் வழியாக அக்ரகாரம் வண்டிபேட்டை, சத்யா நகர், நெறிகல் மேடு, காவேரி ரோடு மாரியம்மன் கோவில், 16 நம்பர் பஸ் ரோடு, சத்திரோடு, சுவஸ்திக் கார்னர், பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, மரகதவள்ளி பங்க் வழியாக பட்டேல் வீதி, கலைமகள் பள்ளி வழியாக பிரப் ரோடு, பன்னீர் செல்வம் பார்க், காந்திஜி ரோடு வழியாக அசோக புரி, விக்ரம் மருத்துவமனை வழியாக ரோடு, காளைமாட்டு சிலை வழியாக காந்திஜி சிம்னி ஓட்டல், பழைய ரெயில் நிலையம் வழியாக ஆலமரத்து தெரு, சமாதானம்மாள் சத்திரம், சூரம்பட்டி நால்ரோடு, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை வரை பிரசாரம் செய்கிறார்.

எப்படி பயணம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 19-ந்தேதி சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு குமலன் குட்டை, கணபதி நகர், அடுக்குமாடி குடியிருப்பு, நாராயண வலசு, இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, அகில் மேடு வீதி, பழனி மலை கவுண்டர் வீதி, சொக்கநாதர் வீதி, மெட்ராஸ் ஓட்டல், ராஜாஜிபுரம், கே.என்.கே.ரோடு, வண்டியூரான் கோவில் வீதி, விநாயகர் கோவில் வீதி, கிருஷ்ணம்பாளையம், திருநகர் காலனி, சகன் வீதி, சேரன் வீதி, வீரப்பன் சத்திரம் தெப்பக்குளம். 16 நம்பர் பஸ் ரோடு, நெறிகல் மேடு, சத்யா நகர், அக்ரகாரம் வண்டி பேட்டை, பூம்புகார் நகர், காந்திநகர், வில்லரசம் பட்டி நால்ரோடு வழியாக, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் முடிக்கிறார்

எப்படி நிறைவு
20-ந்தேதி சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் புறப்பட்டு அரசு மருத்துவமனை, நல்லசாமி மருத்துவமனை வீதி, சிதம்பரம் செட்டியார் காலனி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் தியேட்டர், கால்நடை மருத்துவமனை எதிரில், சித்திக் திடல், மண்டப வீதி, 1,2 செட்டியார் கடை, ஜின்னா வீதி, கிருஷ்ணா தியேட்டர், காந்தி சிலை (ரங்க பவன் வழியாக சின்ன மாரியம்மன் கோவில் வீதி), பொன்னுசாமி வீதி, கே.ஏ.எஸ். நகர், வளையக்கார வீதி, காரை வாய்க்கால், அண்ணா டெக்ஸ், சமாதானம்மாள் சத்திரம், பழைய ரெயில் நிலையம் ரோடு, ஆலமரத்து தெரு, அண்ணாமலை பிள்ளை வீதி, பட்டக்கார வீதி, பொய்யேரிக்கரை வீதி பயர் சர்வீஸ் பின்புறம், காளைமாட்டு சிலை, மணல் மேடு, பழைய எம்ப்லாய்மென்ட் ஆபிஸ் ரோடு வழியாக கிராமடை, சீனிவாசா தியேட்டர், என்.ஜி.ஜி.ஓ காலனி, பெருந்துறை ரோடு, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 12-ம் தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பும் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். 13-ந்தேதி மாலையில் திருநகர் காலனியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் சீமான், தொடர்ந்து 2 நாட்கள் வேட்பாளருடன் பிரசாரம் செய்து ஆதரவு திரட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் 12-ந் தேதி பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது. பிரேமலதா, விஜயபிரபாகர் பிரசாரம் குறித்த விவரம் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் தேமுதிகவினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications