ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எக்ஸிட் போல் குறித்து திமுக பெருமைப்பட தேவையில்லை.. நிச்சயம் காங்., வீழும்.. இல.கணேசன் உற்சாகம்

Google Oneindia Tamil News

ஈரோடு: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வீழ்ச்சியை சந்திப்பது நிச்சயம் என தாம் கூறி வரும் கருத்தையே, எக்ஸிட் போல் முடிவுகளும் பிரதிபலிப்பதாக பாரதிய ஜனதா மூதத் தலைவரான இல.கணேசன் கூறியுள்ளார்.

கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதை விடவும் குறைவான இடங்களில் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த தேர்தலின் போது குஜராத் முதல்வராக மோடி செய்த சாதனைகளை வைத்தே, 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் தனிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சியை பாரதிய ஜனதா நிறுவியது.

DMK does not need to be proud about exit poll..La.Ganesan interview

தற்போது கடந்த 5 ஆண்டுகளில் மோடி நாட்டுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொடுத்துள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் உணர்வுகளில் கலந்துள்ளார்.

இது தவிர ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் மத்திய அரசின் திட்டங்களால் நேரடி பலன் பெறுபவர்கள் சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை உள்ளனர். இதனால் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்று நிச்சயமாக ஆட்சியை தக்க வைக்கும் என்றார்.

கடந்த மக்களவை தேர்தலிலாவது காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் கிடைத்தது. இம்முறை அதை விடவும் குறைவான தொகுதிகளே கிடைக்கும் என இலகணேசன் தெரிவித்துள்ளார்.

அங்குதான் தனித்து நிற்கிறார் தீதி.. தனது திட்டத்தில் உறுதியாக இருக்கும் மமதா.. களமிறங்கினார்! அங்குதான் தனித்து நிற்கிறார் தீதி.. தனது திட்டத்தில் உறுதியாக இருக்கும் மமதா.. களமிறங்கினார்!

தமிழகத்தை பொருத்தவரை கருத்துக்கணிப்புகள் மாற கூடிய வாய்ப்புள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் திமுக பெருமைப்பட ஒன்றும் இல்லை, தமிழகத்தில் பாஜகவுக்கு 50% வெற்றி வாய்ப்புள்ளது என்றார்.

அழிவை நோக்கி செல்லும் பெருங்காய டப்பாவான காங்கிரஸ் கட்சியை மற்ற கட்சிகள் கை கழுவும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறினார்.

English summary
Bharatiya Janata Party leader L. Ganeshan has said that the Congress party's biggest fall in the Lok Sabha polls is the opinion that the results are exclusive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X