டெல்லியை போன்று தமிழகத்திலும்.. திமுகவை குறிப்பிட்டு விமர்சித்து பகீர் கிளப்பிய பாஜக துணை தலைவர்
ஈரோடு: தமிழகத்தில் டெல்லி போன்று கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முயற்சிப்பதாக பா.ஜ.க தேசிய இளைஞரணி துணைத்தலைவர் முருகானந்தம் குற்றம்சாட்டி உள்ளார்...
Recommended Video
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகானந்தம், "குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி தெளிவாக விளக்கி உள்ளார். இந்த சட்டத்தால் 130 கோடி இந்திய மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது.. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி அரசியல் ஆதாயம் தேடுகின்றன. திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அமைதியாக இருக்கும் தமிழகத்தில் டெல்லி போன்று கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
தமிழகத்தில் இந்த சட்டத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. குடியுரிமை சட்டத் திருத்தத்தின் பெயரில் தமிழகத்தில் வன்முறையை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம் வலியுறுத்தியும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று பேரணி நடத்துகிறோம்" இவ்வாறு கூறினார்.
-
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே!












Click it and Unblock the Notifications