ஈரோடு தேர்தல் ஒரு தொடக்கம்! அடுத்து, மக்களவையை தீர்மானிக்கும் திமுக! தமிழன் பிரசன்னா சொன்ன வார்த்தை
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து திமுகவின் தமிழன் பிரசன்னா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக அக்கட்சியினர் தமிழன் பிரசன்னா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், இப்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.
இதில் அதிமுக வேட்பாளரை விட தொடக்கம் முதலே அதிக வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் இருந்தார். இறுதியில் மிக பெரியளவில் காங்கிரஸ் இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது

தமிழன் பிரசன்னா
இதனிடையே தனியார் டிவி சேனல் ஒன்றில் கலந்து கொண்ட திமுகவின் தமிழன் பிரசன்னா பேசுகையில், " இந்த இடைத்தேர்தலில் திமுக மிக பெரிய வெற்றியைப் பெறுவோம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறோம். இதில் அதிமுக டெபாசிட் கூட இழக்கலாம். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இப்படியொரு முதல்வரைப் பார்த்தே இல்லை. ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களின் நலனுக்காகச் சிந்தித்து, உழைக்கும் முதல்வராக இருக்கிறார். இதனால் தான் அவரது காலத்திலேயே அவருக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மிக பெரிய வெற்றி
ஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார். இரு நாட்களுக்கு முன்பு, அவர் ஏழு திட்டங்களைக் கொண்டு வந்தார். சொன்னதைச் செய்வோம் கருணாநிதி பாணியில் இல்லாமல் சொல்லாததையும் செய்வோம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒதுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு அற்புதமான ஆட்சியை ஸ்டாலின் தந்து வருகிறார். பிரசாரத்திலேயே மக்கள் அவருக்கு மிகப் பெரிய ஆதரவைத் தந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலின் தொடக்கம்
இந்த இடைத்தேர்தல் முடிவில்லை தொடக்கம். இந்திய நாடாளுமன்றத்தைத் தீர்மானிக்கும் நிலைக்கு திமுகவும் ஸ்டாலினும் வருவார் என்று சொன்னோம். அதற்கான தொடக்கமாக இந்த ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் தொடர்ந்து அதிகரிக்கும். மக்களைக் கொள்கை மூலம் வென்றெடுக்க முடியாதவர்கள்... தேர்தலில் வெற்றி வியூகம் வகுக்க தெரியாதவர்கள். தோல்வி உறுதி என்பதை உணர்ந்து கொண்டவர்கள் எப்போதும் சொல்லும் கருத்துகள் தான் இவை. இதற்குப் பதில் அளிப்பதே தேவையில்லாத ஒன்று.

பொய் குற்றச்சாட்டு
டெபாசிட் வாங்க முடியாதவர்கள் இப்படி தான் வாங்கப்பட்ட வாக்குகள் என்று பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார்கள். இது வாக்காளர்களைக் கொச்சைப் படுத்தும் விதமான பேச்சு. இந்த இடைத்தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் தான் நடத்துகிறது. மத்திய தேர்தல் ஆணைய தலைவர் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக நான் உட்பட பலரும் குற்றஞ்சாட்டுகிறோம். திமுகவும் பாஜகவும் நேர் எதிராக இருக்கிறது. பணம் கொடுத்த குற்றச்சாட்டு உண்மை என்றால் அவர்கள் தேர்தலையே நிறுத்தியிருக்கலாமே.. திமுகவை ஒழித்துக்கட்டச் சரியான நேரம் என இதைப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆர்கே நகர்
ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. ஏனென்றால் நாங்கள் மக்களை நேரடியாகக் களத்திற்குச் சென்று சந்தித்தோம். இன்னும் எத்தனை காலம் பொய்யான தகவல்களைப் பரப்ப முடியும். வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகவே இருந்தது. யாருடைய கொள்கை மக்களுக்குச் சென்று சேர்ந்தது என்பதையே இந்த தேர்தல் காட்டுகிறது. திமுகவுக்கும் கடந்த காலங்களில் இடைத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளன. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நாங்கள் டெபாசிட் இழந்தோம். அதில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் 89 கோடி ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த விவகாரத்தில் இன்னும் விசாரணை நிலுவையில் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இருப்பினும், எங்கள் மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால், சட்டத்தைப் பின்பற்றி நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் கண்ணியமான முறையிலேயே எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வருகிறோம். ஆனால், அவர் தான் மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதுபோன்ற செயல்களால் தான் வாக்காளர்கள் அவரை முற்றிலுமாக நிராகரித்துவிட்டனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications