பெருந்துறை இடைத்தேர்தல்.. அதிமுக பக்கம் காய் நகர்த்திய தோப்பு வெங்கடாச்சலம்.. அடித்தாடிய திமுக!
ஈரோடு: திமுகவில் ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. பெருந்துறை இடைத்தேர்தலில் மீண்டும் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு வாய்ப்பளிக்க திமுக விரும்பவில்லை. இதனையறிந்து அதிமுக பக்கம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதே, பதவி பறிப்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
திமுகவின் ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளராக இருந்து வந்தச்வர் தோப்பு வெங்கடாச்சலம். நேற்று அவரை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக திமுக தலைமை அறிவித்தது. தோப்பு வெங்கடாச்சலம் பதவி நீக்கத்திற்கான எந்த காரணத்தையும் திமுக தலைமை வெளியிடவில்லை. இதனால் ஈரோடு மாவட்ட திமுகவில் என்ன நடக்கிறது என்பதை விசாரித்தோம்.

2011 சட்டசபைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் தோப்பு வெங்கடாச்சலம். இதன்பின் ஜெயலலிதா அமைச்சரவையில் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்கு பின், ஈரோடு மாவட்ட அரசியலில் செங்கோட்டையன் முக்கியத்துவம் பெறுகிறார்.
இதனால் 2021 சட்டசபைத் தேர்தலில் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் 9 ஆயிரம் வாக்குகளை பெறுகிறார். இதனைத் தொடர்ந்து திமுகவில் ஐக்கியமாகிய தோப்பு வெங்கடாச்சலம், 3 ஆண்டுகளாக கட்சி பணிகளில் ஈடுபடுகிறார்.
தொடர்ந்து ஈரோடு மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால் 2026ல் திமுக சார்பாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட அவர் மீண்டும் தோல்வி அடைந்தார். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் முத்துசாமி மற்றும் தோப்பு வெங்கடாச்சலம் இருவருக்கும் இடையில் மோதல் முற்றியது.
முத்துசாமியின் உள்ளடி வேலைகளால் தான் தோப்பு வெங்கடாச்சலம் தோற்றார் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இதுதொடர்பாக திமுக தலைமையிடமும் தோப்பு வெங்கடாச்சலம் பேசி இருந்தார். ஆனால் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலம் மீண்டும் அதிமுக பக்கம் செல்லும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
இதனை அறிந்து கொண்ட திமுக தலைமை, உடனடியாக மாவட்டச் செயலாளர் பதவியை பறித்துள்ளது. ஏனென்றால் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற ஜெயக்குமார் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டார். ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் விஜய் பாலாஜி மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரும் அமைச்சர்களாக இருக்கின்றனர்.
இதனால் தவெகவில் அரசியல் எதிர்காலம் இல்லை என்று கருதிய தோப்பு வெங்கடாச்சலம், அதிமுகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திற்கு வந்துள்ளார். அதேபோல் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு மீண்டும் இடைத்தேர்தலில் வாய்ப்பு அளிக்க திமுகவும் விரும்பவில்லை. இதனையெல்லாம் கணக்கிட்டு தான் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை முன்கூட்டியே பறித்துள்ளது.


Click it and Unblock the Notifications
