Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக தேர்தல் அறிக்கை..தென்னரசு ஜெயித்தால்தான் நடக்கும்..ஈரோட்டில் அண்ணாமலை சொன்ன புது கணக்கு

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தோற்றால்தான் வாக்குறுதியை நிறைவேற்ற ஆரம்பிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: திமுகவின் 517 தேர்தல் வாக்குறுதியில் இன்றைய தேதியில் வெறும் 49 வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டது. கே.எஸ் தென்னரசு வெற்றி பெற்று கோட்டைக்கு போகும் போதுதான் திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஆரம்பிக்கும் என்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை பேசினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இடையன்காட்டு வலசு பகுதியில் அண்ணாமலை பிரசார வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அண்ணாமலையுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் இருந்தனர். அண்ணாமலை கே.எஸ் தென்னரசுக்கு வாக்கு கேட்டு பேசியதாவது:-

22 மாதங்கள் ஆகிவிட்டது

22 மாதங்கள் ஆகிவிட்டது

இந்த இடைத்தேர்தலில் கே.எஸ் தென்னரசு ஜெயிக்க வேண்டும். ஏனென்றால் திமுகவின் 517 தேர்தல் வாக்குறுதியில் இன்றைய தேதியில் வெறும் 49 வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டது. அப்படியென்றால் 3-ல் ஒரு பங்கு முடிந்துவிட்டது. ஆனால் கே.எஸ் தென்னரசு வெற்றி பெற்று கோட்டைக்கு போகும் போதுதான் திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஆரம்பிக்கும். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருந்தால் 22 மாதங்களுக்கு 22 ஆயிரம் ரூபாய் வந்து இருக்கும்.

சிலிண்டருக்கும் 100 ரூபாய் கொடுப்போம்

சிலிண்டருக்கும் 100 ரூபாய் கொடுப்போம்

ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு தாய்மார்கள், சகோதரிகளின் வங்கிக்கணக்கிலும் 22 ஆயிரம் ரூபாய் வந்திருக்க வேண்டும். கே.எஸ் தென்னரசு ஜெயிப்பதன் மூலம் தான் திமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படும். நாங்க ஜெயிச்சி வந்தால் ஒவ்வொரு சிலிண்டருக்கும் 100 ரூபாய் கொடுப்போம் என்று திமுக இன்னொரு வாக்குறுதியையும் கொடுத்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் சிலிண்டரை பயன்படுத்தும் பெண்கள் 1.21 லட்சம் பேர் இருக்கின்றனர்.

24,200 ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு

24,200 ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு

உங்களுக்கு நூறு ரூபாய் கொடுத்து இருந்தால் 22 மாதங்களில் 2 ஆயிரத்து 200 ரூபாய் உங்கள் அக்கவுண்டிற்கு வந்து இருக்க வேண்டும். மொத்தமாக 24,200 ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து இருக்க வேண்டும். அது வராது... காரணம் திமுகவை பொறுத்தவரை ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழக அரசியலை பிற கட்சிகள் எல்லாம் முன்னோக்கி கொண்டு செல்ல நினைத்தால் திமுக 1950-60 கால கட்டத்திற்கு தமிழக தேர்தல் களத்தை எடுத்து சென்று கொண்டிருக்கிறது. எங்கேயும் இல்லாத அநியாயம் தென்னரசுக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த அநியாயத்தை எங்கேயும்..

இந்த அநியாயத்தை எங்கேயும்..

ஒரு வேட்பாளரை எதிர்த்து இன்று 30 அமைச்சர்கள் ஈரோட்டில் இருக்கிறார்கள். பொதுமக்களை பட்டி பட்டியாக அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த அநியாயத்தை இந்தியாவில் எங்கேயும் யாரும் பார்த்தது கிடையாது. ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு 27 ஆம் தேதிவரைதான் இப்படி ராஜ மரியாதை கொடுப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகு தென்னரசு மட்டுமே தொகுதிக்குள் இருப்பார். 27 ஆம் தேதி தேர்தல் முடிந்ததும் அனைத்து திமுக அமைச்சர்களும் காணாமல் போய்விடுவார்கள் என்பது நிச்சயம். அதுக்கப்புறம் நீங்கள் யாரைப்பார்த்து என்ன கேட்பீங்க..

குரூப் 4 தேர்வு முடிவுகளை கூட

குரூப் 4 தேர்வு முடிவுகளை கூட

திமுக ஆட்சிசிக்கு வந்தததும் 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை ஏற்படுத்தி கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆண்டுக்கு 70 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டது. குரூப் 4 தேர்வு முடிவுகளை கூட இன்னும் வெளியிடவில்லை. எனவே இளைஞர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. எனவே இளைஞர்கள் வீட்டிற்கு போய் பெரியவர்களிடம் சொல்லி ஓட்டு போட வைப்பது உங்கள் கடமை. இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகிக்கொண்டு இருக்கிறது. எல்லா தரப்பு மக்களுக்கும் அநியாமும் செய்யக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. 27 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் கே.எஸ். தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+