ஈரோடு அதிசயம்.. வானிலிருந்து குபுக்னு தோன்றிய "சிவலிங்கம்".. பரவசத்தில் பவானி.. சிவன் எப்படி இப்படி?
ஈரோடு: ஈரோட்டில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த மாவட்ட மக்களையும் பரவசத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.. என்ன காரணம்? என்ன நடந்தது?
கடந்த மாதம் வேலூர் மாவட்டம், ஊசூர் அருகே ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்தது.. சேக்கனூர் ஊராட்சி அருகேயிருக்கும் பெரிய ஏரியில், 100 நாள் வேலை திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

புதிய குளம்: புதிய குளம் வெட்டும் பணிகள் நடப்பதால், குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தும் வேலைகளில் 100 நாள் வேலை தொழிலாளர்கள், சுமார் 150க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்.
சம்பவ தினத்தன்று, கடப்பாறை, மண்வெட்டிகளை கொண்டு, மண்ணை வாரி கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு கல் தென்பட்டுள்ளது.. அந்த கல்லிலிருக்கும் மண்ணை அகற்றி பார்த்தபோதுதான் அது சிவலிங்கம் என்று தெரிந்தது. 2 அடி உயரத்துக்கு சிவலிங்கம் கிடைத்த தகவல் பரவிவிடவும், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சுற்றுவட்டார மக்கள் குளத்தங்கரையில் திரண்டுவிட்டார்கள்.
சிவலிங்கம்: சிவலிங்கத்தை தண்ணீர் ஊற்றி செய்து, மஞ்சள், குங்குமம், திருநீறு பூசி, ஊதுபத்தி, கற்பூரம் ஏற்றி பூ வைத்து அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகளிலும் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் இதுகுறித்த தகவலறிந்து, வருவாய் ஆய்வாளர், VAO , உள்ளிட்டோர் சிவலிங்கத்தை அணைக்கட்டு தாலுகா ஆபீசுக்கு கொண்டு சென்று பாதுகாப்பு அறையில் வைத்து, தொல்லியல் துறை அலுவலர்களுக்கும் தகவல் தந்தனர்.
பெரிய ஏரியில் சிவலிங்கத்துக்கு, ஆரத்தி எடுத்தபோது, பெண் ஒருவர் திடீரென சாமி வந்து ஆடினார்... பல வருடங்களாகவே பாழடைந்து தூர் வாரப்படாமல் இந்த குளத்தில், இதற்கு முன்பு ஏதாவது கோயில் புதையுண்டு இருக்கலாம் என்கிறார்கள்.. எனவே, தொல்லியல் துறையினர் சிவலிங்கம் கிடைத்த இடத்தில் ஆய்வு செய்யவும் கோரிக்கையை விடுத்தனர்.
சுயம்புலிங்கம்: திடீரென தோன்றும் இதுபோன்ற சுயம்புலிங்கத்தினால், பக்தர்கள் பரவசமாகிவிடுகிறார்கள்.. அப்படித்தான் ஈரோட்டிலும் தற்போது ஒரு பரவச சம்பவம் நடந்துள்ளது..
ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாகவே, காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து, மாலை 6.30 மணிக்கு மேல்தான் மறைகிறது. இதனால் சுமார் 7 மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே உள்ளது... இந்நிலையில், நேற்று சாயங்காலமும் ஈரோடு மாவட்ட பகுதிகளில் சூரியன் மெல்ல மறைய துவங்கியது.. மேக கூட்டங்களும் ஒன்று சூழ்ந்து ரம்மியமாக காட்சி தந்தன..
மேக கூட்டங்கள்: ஆனால், ஒரு சில இடங்களில் மட்டும் சூரியன் மறையும் நேரத்தில், மேக கூட்டங்கள் சிவப்பு நிறமாக தோன்றியது.. மற்ற இடங்களில் பல்வேறு நிறங்களில் காட்சி தந்தது.. குறிப்பாக, பவானி அடுத்த ஊராட்சி கோட்டை மலைப்பகுதியில், நேற்று மாலை வானம் மேகமூட்டத்தோடு இருந்த நிலையில், திடீரென மேக கூட்டங்களில் உருவம் ஒன்று தென்பட்டுள்ளது.. சிறிது நொடிகளிலேயே அது சிவலிங்கம் போல காட்சியளித்தது.
நேரம் செல்ல, செல்ல சிவப்பு நிறத்தின் நடுவே, சிவலிங்கம் மட்டும் இருப்பது போல் தோன்றியது.. இதைப்பார்த்ததுமே ஈரோட்டு மக்கள் பரவசத்தின் உச்சிக்கு போனார்கள்.. வானில் சிவபெருமான் தோன்றிவிட்டார் என்று ஒருவருக்கொருவர் ஆச்சரியங்களை பரிமாறிக் கொண்டனர்.. ஒருசிலர் இந்த காட்சியை செல்போனிலும் வீடியோ எடுத்துக் கொண்டனர். மேக மூட்டங்களில் சிவலிங்கம் தோன்றினார் என்று சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்.. அந்த வீடியோதான் இப்போதுவரை வைரலாகி கொண்டிருக்கிறது.
வீடியோ: ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஊராட்சி கோட்டை மலைப்பகுதி மட்டுமல்லாமல், வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்களும், வானில் சிவன் தோன்றியதை பார்த்துள்ளார்களாம். இதை பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.. சில இடங்களில் "பனிலிங்கம்" போலவும் தென்பட்டுள்ளதாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications