ஈரக்குலையே நடுங்கிடுச்சே.. பசுமாட்டின் குடலை கிழித்த "கருப்பன்".. ரங்கசாமி கோயில் வாசலில் கபில்தேவ்
சத்தியமங்கலத்தில் கருப்பன் யானையை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்
ஈரோடு: இன்று இரவுக்குள் எப்படியாவது கருப்பனை பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.. இதனால் சத்தியமங்கலத்தில் எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, ஜீரஹள்ளி, ஆசனூர் உள்ளிட்ட வனச்சரகங்களில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகின்றன..
இதில், தாளவாடி தாலுகாவிலுள்ள பகுதிகளிலும், சுற்றுவட்டார கிராமங்களிலும், யானைகள் புகுந்துவிடுகின்றன. இந்த யானைகள் சில சமயம் கூட்டமாகவும், பல சமயம் ஒற்றை யானையாகவும் உள்ளே புகுந்து, விவசாய நிலங்களை அழித்து நாசம் செய்கின்றன...

கருப்பன்
கூட்டமாக வரும் யானைகளைவிட ஒற்றை யானையின் அட்டகாசம்தான் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். இந்த ஒற்றை காட்டு யானைக்கு அந்த பகுதி மக்கள் "கருப்பன்" என்று தனிப்பெயரும் வைத்திருக்கிறார்கள்.. இந்த கருப்பன், மனிதர்களையும் வேட்டையாடிவிடுவது தொடர்கதையாகி வருகின்றன.. சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில், கருப்பன் நுழைந்துவிட்டான்.. பயிர்களை சேதப்படுத்தியதுடன், 2 பேரையும் மிதித்து கொன்றது...

டீரோன் டீம்கள்
அதற்கு பிறகு, வனத்துறையினர் இதில் தீவிரமாக இறங்கி, அந்த கருப்பன் யானையை பிடித்து கொண்டுபோய் காட்டில் விட்டுவிட்டு வந்தனர்.. சில நாட்கள் கழித்து மறுபடியும் கருப்பன் அட்டகாசம் இதே பகுதிக்குள் ஆரம்பமாகிவிட்டது.. விளைநிலங்களை பாழாக்கி கொண்டிருக்கிறது. அதனால் இந்த கருப்பனை பிடிப்பதற்காக, மறுபடியும் வனத்துறையினர் களமிறங்கி உள்ளனர்.. கருப்பன் யானையின் நடமாட்டத்தை டிரோன் கேமராக்களின் உதவியுடன் கண்காணிப்பு நடந்து வருகிறது.. இதற்காக 4 டிரோன் கேமரா டீம்களை களத்தில் இறக்கப்பட்டுள்ளது. கருப்பனுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அதற்கு பிறகு, காட்டுக் கொண்டு சென்றுவிட பிளான் செய்துள்ளனர்..

கேப்டன் கலீம்
இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமிலிருந்து கலீம், முத்து, கபில்தேவ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.. ரங்கசாமி கோயில் பக்கத்தில் முத்துவும், கபில்தேவ், கலீமும் நின்று கொண்டிருக்கின்றன. இந்த 3 யானைகளில் கலீம்தான் கேப்டனாம்.. கலீமுடன் சேர்ந்து முத்து, கபில்தேவ்வை வைத்துதான் இந்த ஆபரேஷனை அதிகாரிகள் செய்யப்போகிறார்கள். 4 வன கால்நடை மருத்துவர்கள் ரெடியாக இருக்கிறார்கள்.. மேலும், 150 வனப்பணியாளர்களும் கருப்பனை பிடிக்க மும்முரமாகி உள்ளனர். இப்படி அதிகாரிகள் ஒருபக்கம் திட்டமிட்டு கொண்டிருக்கும் அதேசமயம், கருப்பன் அட்டகாசம் அதிகரித்து கொண்டே வருகிறது..

3 கும்மிகள்
நேற்று முன்தினம் இரவு மரியபுரம், ஜோரகாடு, மற்றும் ரங்கசாமி கோவில் வழிதடத்தில் வனத்துறையினர் 3 கும்கிகளுடன் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வரவில்லை.. அதனால், நேற்றிரவு, மல்குத்திபுரம் பகுதியில் கண்காணித்தபோது, அங்கே கருப்பனை கண்டுபிடித்துவிட்டனர்.. இதையடுத்து உடனடியாக மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் கருப்பன் யானையை சுற்றி வளைத்தனர்...

எகிறி தப்பித்தனர்
ஆனால் கருப்பனுக்கு மயக்கஊசி செலுத்தவே முடியவில்லை.. மாறாக, மருத்துவகுழுவினரை பார்த்ததுமே கருப்பன் துரத்த ஆரம்பித்துவிட்டது.. இதனால் மொத்த பேரும் பதறிக்கொண்டே ஓடினார்கள்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.. அதற்கு பிறகு கருப்பன் அங்கிருந்து எகிறியது.. மல்குத்திபுரம் கிராமத்தில் சொன்னஞ்சப்பா என்பவர் வீட்டின் முன்பு, கட்டி இருந்த பசுமாட்டை முட்டி தள்ளியது... இதில் மாட்டின் குடல் வெளியே வந்துவிட்டது.. அந்த பசுமாடு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது.. எப்படியும் கருப்பனை இன்று இரவுக்குள் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கையாக சொல்கிறார்கள் வனத்துறையினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications