Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதை" ரப்பர்பேண்டால் சுத்தி.. பால்கனி பூந்தொட்டிக்குள்.. ராஜேஸ்வரி செய்த காரியம்.. அரண்டு போன போலீஸ்

நாமக்கல்லில் லஞ்சப்பணம் 30 ஆயிரம் வாங்கிய பெண் அதிகாரி ராஜேஸ்வரி கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பெண் அதிகாரி ராஜேஸ்வரியின் வீட்டுக்குள் எங்கே திரும்பினாலும் பணம்தான்.. அவைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து, ராஜேஸ்வரியிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாமக்கல்லை சேர்ந்தவர் சுரேஷ்.. இவர், சுய உதவிக்குழுக்களின் புதுப்பித்தல் பணிகளை தனியார் மூலமாக செய்து தந்து வருபவர்.. இவர் திடீரென ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில், சார்-பதிவாளர் ராஜேஸ்வரி என்பவர் குறித்து புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், தன்னிடம் இருந்து பெறப்பட்ட 4 சுய உதவிக்குழுக்களின் கணக்குகளை சரிபார்த்து தருவதற்காக ராஜேஸ்வரி ஒரு குழுவுக்கு ரூ.6,000 வீதம் ரூ. 24,000மும், உதவியாளர் தமிழ்செல்வனுக்கு ரூ.1,500 வீதம் ரூ.6,000 என மொத்தம் ரூ.30,000 ஐ லஞ்சமாக வழங்குமாறு ராஜேஸ்வரி கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்திருந்தார்.

30000

30000

சுரேஷ் தந்த இந்த புகாரின்பேரில், ராஜேஸ்வரி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.. ராஜேஸ்வரி லஞ்சமாக கேட்ட 30 ஆயிரம் ரூபாய் பணத்தில், ரசாயனத்தை தடவி, அவைகளை சுரேஷிடம் கொடுத்து அனுப்பினார்கள்.. சுரேஷூம் ராஜேஸ்வரியிடம் அந்த பணத்தைக் கொடுக்க சுரேஷ் சென்றபோது உதவியாளர் தமிழ்செல்வனிடம் தருமாறு ராஜேஸ்வரி சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து தமிழ்செல்வனிடம் பணம் ரூ.30,000த்தை கொடுத்து விட்டு, சுரேஷ் சிக்னல் தந்துள்ளார்.. அப்போது அங்கு மறைவாக இருந்த போலீஸார், தமிழ்செல்வனை சுற்றி வளைத்து ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்..

 டாக்குமெண்ட்கள்

டாக்குமெண்ட்கள்

இதையடுத்து அந்த அலுவலகத்தின் ரூம் கதவை மூடி விட்டு பல மணி நேரம் சோதனையையும் மேற்கொண்டனர்.. இறுதியில், லஞ்சம் வாங்கச் சொன்ன சார்-பதிவாளர் ராஜேஷ்வரியையும், அவரது உதவியாளர் தமிழ்செல்வனையும் போலீஸார் கைது செய்தனர்... பெண் அதிகாரி லஞ்சம் வாங்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஆடவர், மகளிர் சுய உதவிக்குழுக்கள், சீட்டு நிறுவனம், நிதி நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை வருடந்தோறும் சரிபார்த்து அவற்றை புதுப்பிப்பது ராஜேஸ்வரியின் பணி என்றால், அனைத்து பதிவு பணிகளையும் ஆய்வுசெய்து, அதை கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வதுதான், இவரின் உதவியாளராக இருக்கும் தமிழ்செல்வனின் பணியாகும்.

 பால்கனி பூந்தொட்டிகள்

பால்கனி பூந்தொட்டிகள்

இவருக்கு 40 வயதாகிறது. ராஜேஸ்வரிக்கு செல்லும் லஞ்சப்பணத்தில், தமிழ்செல்வனுக்கும் ஒரு பங்கும் சென்றுவிடுமாம். ஆனால், எப்போதுமே நேரடியாக லஞ்ச பணத்தை ராஜேஸ்வரி வாங்க மாட்டாராம். ராஜேஸ்வரியை கைது செய்த நிலையில், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சொல்லும்போது, சார்-பதிவாளர் ராஜேஸ்வரியின் வீடு, கோவையில் உள்ளது. அங்கும், அவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறும். இந்தச் சோதனையின் முடிவில் தான் அவருக்கு எங்கெங்கு சொத்துகள், பணம், நகைகள் உள்ளன என்ற விவரங்கள் தெரிய வரும் என்றார்.

ஷெல்ப்கள்

ஷெல்ப்கள்

இதையடுத்து, பதிவாளர் ராஜேஸ்வரியின் கோவை மாவட்டத்தில் உள்ள வீட்டில் சோதனையும் நடைபெற்றது. கோவை ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.. அப்போது ராஜேஸ்வரி வீட்டு பால்கனியில், நிறைய பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்ததாம்.. அந்த பூந்தொட்டிகளுக்குள் கட்டு கட்டாக ரூபாய்கள் இருந்தன.. அதேபோல வீட்டின் ஷெல்ப்களிலும் பணக்கட்டுகள் கிடந்துள்ளன.. பழைய பேப்பர் வைக்கும் இடங்களில்கூட, ரூபாய்நோட்டுக்கள்தான் காணப்பட்டதாம்..

 ரப்பர் பேண்ட்

ரப்பர் பேண்ட்

சாதாரண ஷெல்ப் முதல், பழைய பொருட்கள் வைத்திருக்கும் இடம்வரை, பணம் கட்டுக்கட்டாக இருப்பதை பார்த்து போலீசார் அரண்டு போயுள்ளனர். அந்த பணக்கட்டுகள், ரப்பர் பேன்டால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாம்.. இப்போதைக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாயை மட்டும் போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.. இந்த பணம் முழுவதும் லஞ்சம் வாங்கியதுதானாம்.. இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இனிமேல்தான், ராஜேஸ்வரி இதுவரை எத்தனை பேரை ஏமாற்றினார், எவ்வளவு லஞ்சம் பெற்றிருக்கிறார் என்ற விவரமெல்லாம் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்..!!!

கருப்பு ஆடு

கருப்பு ஆடு

ராஜேஸ்வரி வீட்டில் பீரோவில் இருந்த 50 சவரன் நகைகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.. அதேபோல, இன்றைய தினம் ராஜேஸ்வரி பெயரில் 4 வங்கிகளில் கணக்கு உள்ளதாம்.. இந்த கணக்குகளில் உள்ள லாக்கரில் இன்று சோதனை செய்யப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ரப்பர்பேன்ட், நூல்களால் சுற்றப்பட்டு கட்டு கட்டாக கிடந்த பணம் கிடைத்தது குறித்த விசாரணையும் ராஜேஸ்வரியிடம் தற்போது துவங்கி உள்ளது.. ராஜேஸ்வரியின் வீடு கோவையில் உள்ள நிலையில், அவருக்கு சொந்தமாக மேலும் சில இடங்கள் உள்ளதாக சொல்கிறார்கள். அங்கும் சோதனை நடைபெற உள்ளதாகவும், இந்த சோதனையின் முடிவில் தான் அவருக்கு எங்கெங்கு சொத்துகள், பணம், நகைகள் உள்ளன என்ற விவரங்கள் தெரிய வரும் என்றும் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+