Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண் நண்பருடன் மது குடித்த பெண்.. நடுரோட்டில் ரகளை.. பஸ்சை மறித்து ஆபாச பேச்சு.. முகம் சுளித்த ஈரோடு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் போதை தலைக்கேறிய நிலையில் பெண் ஒருவர் வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதோடு ஆபாசமாக பேசியது அங்குள்ள மக்களை முகம் சுளிக்க வைத்தது. தகவல் கிடைத்து வந்த போலீசார் அந்த பெண்ணை அலேக்காக தூக்கி கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே இரவு நேரத்தில் மதுபோதையில் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டது வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க வைத்தது. சாலையில் கத்திக்கொண்டே சென்றது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக நடந்தது என இரவு பரபரப்பான நேரத்தில் பெண் அதகளம் செய்தார். தன்னுடன் வந்திருந்த முதியவர்களை தாக்கியது பற்றி விசாரித்த போது அப்பெண் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

Drunk woman in Erode create ruckus in Road: Police took her to hospital

டிராபிக் போலிஸ் வந்த போதும் கூட கொஞ்சமும் மாறாத அந்த பெண் தன்னிலை மறந்து சாலையில் சென்ற பேருந்தை மறித்து ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசினார். தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்ததால் அந்த பெண்ணை அப்புற படுத்த டிராபிக் போலீஸ் எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் துளியும் பயன் கிடைக்கவில்லை. அவ்வழியாக வந்த மக்களும் முயற்சித்து பார்த்தனர்.

ஆனால் திட்டு வாங்கியதுதான் மிச்சம் என்ற நிலை ஆனது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு போலீசாரை டிராபிக் போலீஸ் அழைத்தார். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த பெண் போலீசார், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு வந்த பெண்ணை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் போட்டனர். அங்கிருந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பெண் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்ற பிறகும் அந்த பெண் அங்கும் ரகளை செய்தார்.

Drunk woman in Erode create ruckus in Road: Police took her to hospital

இதனால் அவரது கை கால்களை கட்டி மயக்க ஊசி செலுத்தி பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். விசாரணையில் அந்த பெண் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அங்கு லட்சுமி என்பது தெரியவந்தது. கணவனை இழந்த நிலையில் தள்ளுவண்டியில் உணவு பொருள் விற்பனை செய்தும் வந்துள்ளார்.

தனது தந்தையின் நண்பரோடு சேர்ந்து தள்ளுவண்டி வாங்குவதற்காக காசு எடுத்துக்கொண்டு வந்தவர் மரப்பாலம் பகுதியை சேர்ந்த தனது நண்பரை சந்தித்து இருக்கிறார். அவருடன் சேர்ந்து மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காலையில் போதை தெளிந்த பிறகு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த அங்கு லட்சுமியை போலீசார் அட்வைஸ் செய்து உறவினரோடு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

Drunk woman in Erode create ruckus in Road: Police took her to hospital

மது வீட்டுக்கு நாட்டுக்கும் எப்படி கேடாய் முடியும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்று இருப்பதாகவும் மக்கள் இனியாவது திருந்தட்டும் எனவும் அங்குள்ளவர்கள் பலரும் பேசிக்கொள்வதை காண முடிந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+