Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னடா இது ஈரோட்டுக்கு வந்த சோதனை.. வாடகைக்கு வீடே கிடைக்கலியாம்.. திடீர் டிமாண்ட்.. ஏன்னு பாருங்க

ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக நகரின் முக்கியப் பகுதிகளில் வாடகை வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக வாடகை வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டின் வசதிக்கு ஏற்ப வாடகை வசூலிக்கப்பட்டு வரும் சூழலில், முக்கிய பகுதிகளில் வாடகைகளுக்கு வீடுகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் புறநகர் பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு பிடித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஜனவரி.31ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.

ஏற்கனவே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அமமுக சார்பாக சிவ பிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தேமுதிக வேட்பாளராக அக்கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

அதேபோல் நாளை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுக சார்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர் நிறுத்த தயார் நிலையில் உள்ளனர். இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிக்குழுவை நியமித்து அறிவித்துள்ளது.

தேர்தல் பொறுப்பாளர்கள்

தேர்தல் பொறுப்பாளர்கள்

திமுக தரப்பில் 11 அமைச்சர்கள் கொண்ட படை களமிறக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 111 பேர் கொண்ட தேர்வு பணிக்குழுவும், அமமுக தரப்பில் 294 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவும், தேமுதிக தரப்பில் 168 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாஜக வேட்பாளரை நிறுத்தினால், அவர்களுக்காக தேர்தல் பணி செய்ய 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

குவியும் அரசியல் கட்சிகள்

குவியும் அரசியல் கட்சிகள்

இதனால் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் குவிந்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் தொடங்கி பிரச்சாரம் முடியும் வரை அனைத்து கட்சி நிர்வாகிகள் ஈரோட்டில் தங்கி பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனால் ஈரோட்டில் வாடகை வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் வீட்டின் வசதியை பொறுத்தவரை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் வாடகை கேட்கப்படுகிறது.

விண்ணை தொடும் வாடகை

விண்ணை தொடும் வாடகை

அதேபோல் பங்களா போன்ற தோற்றம் அளித்தால் ரூ.1 லட்சம் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஈரோடு முக்கிய பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் வாடகைக்கு வீடுகளை பிடித்துவிட்டதால், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திண்டல், கஸ்பாபேட்டை, ரங்கம்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடுகளை தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் விற்பனை

டாஸ்மாக் விற்பனை

அதேபோல் இடைத்தேர்தல் காரணமாக டீ கடை, சைவ ஹோட்டல்கள், அசைவ ஹோட்டல்கள், டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளில் அதிக கூட்டம் நிலவி வருகிறது. இறைச்சி கடைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பணப்புழக்கமும் அதிகரித்துள்ளது. இன்னும் வேட்புமனு தாக்கலே தொடங்கப்படாத நிலையில், பிரச்சாரத்தின் போது முக்கியத் தலைவர்கள் வருகையின் போது ஈரோடு மாவட்டத்தில் இன்னும் களைகட்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+