எதிராக கிளம்பிய பூதம்.. டென்ஷனான எடப்பாடி.. “பின்னாடி நிக்கிறோம்”.. ஐடி விங் நிர்வாகிகளுக்கு ஆர்டர்!
எடப்பாடி பழனிசாமி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிமுகவுக்கு எதிரான விஷயங்கள் ட்ரெண்டாகி வரும் நிலையில், இந்த ஆலோசனையை மேற்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடைசியாக வேட்பாளரை அறிவித்து, கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தாலும், முழு வீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, கடிதம் தொடர்பாக கடந்த சில நாட்களாக சர்ச்சைகள் சுற்றி வருகின்றன. அதோடு அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு பகுதிகளிலும் வேட்பாளர்கள் வாக்காளர்களை வீடு வீடாகச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

ஐடி விங் நிர்வாகிகளுடன் ஆலோசனை
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

டார்கெட்
அதிமுகவின் தேர்தல் பிரசாரம் திமுக அரசு நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை மையப்படுத்தியே உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை முன்னிறுத்தியே அதிமுகவினர் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, திமுகவின் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாத திட்டங்களின் லிஸ்ட்டை கையில் வைத்துக்கொண்டே பிரசாரம் செய்து வருகிறார்.

உடனுக்குடன் ட்ரெண்ட்
திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிவிட்டன. மாதம் 1,000 ரூபாய் வழங்குவதாக கூறியதை இன்னும் வழங்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் உங்கள் பகுதியில் பிரசாரத்துக்கு வருகிறபோது 21 மாதத்துக்கு உங்களுக்குச் சேர வேண்டிய ரூ.23 ஆயிரத்து 100 எங்கே எனக் கேளுங்கள் எனப் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் இந்த பிரச்சார பேச்சுகள் உடனுக்குடன் அதிமுக ஐடி விங் பக்கங்களில் பகிரப்பட்டு, அதிமுகவினரால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளையும் அதிமுக முன்னெடுத்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது.

எதிராக திரும்பிய பேச்சு
இந்நிலையில் தான் கடந்த ஓரிரு நாட்களில் அடுத்தடுத்து சில நிகழ்வுகள் அதிமுகவுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. வேட்டி கட்டிய மீசை வச்ச ஆம்பளையா இருந்தா தேர்தலை நேர்மையாகச் சந்திங்க என ஈபிஎஸ், ஸ்டாலினுக்கு எதிராகப் பேசியது கண்டனங்களைச் சந்தித்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது அவருடைய காலில் விழுந்தீர்கள்.. அவர் மறைந்த பிறகு பதவிக்காக சசிகலா காலில் விழுந்தீர்கள். இதுதான் உங்கள் ஆண்மையா... வேட்டியும், மீசையும்தான் ஆண்மை என்றால் நீங்கள் காலில் விழுந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் மீசை வைத்திருந்தார்களா? என கனிமொழி எம்.பி உள்ளிட்ட திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கடிதம்
போதாக்குறைக்கு எடப்பாடி பழனிசாமி, சாதியை குறிப்பிட்டு ஆதரவு கேட்டு ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் ஒரு தகவல் பரவியது. இது போலியான கடிதம் என்று அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றும், நாளுக்கு நாள் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் வேண்டுமென்றே அரசியல் எதிரிகள் இப்படி ஒரு கடிதத்தை போலியாக உருவாக்கி பரப்பி வருகின்றனர் என்றும் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு அதிர்ச்சி
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் நிலவிய குழப்பம் ஒருவழியாக முடிவுக்கு வந்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சும், எடப்பாடி பழனிசாமி எழுதியதாக பரவிய கடிதமும், சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே வெகுவாகப் பரவியுள்ளன. மேலும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வாக்கு சேகரிக்கச் சென்ற இடங்களில் காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்களும் அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளன.

எடப்பாடி டென்ஷன்
இதுபோல கடந்த ஓரிரு நாட்களில் நடந்த தொடர் நிகழ்வுகள் அதிமுகவுக்கு எதிராகத் திரும்பி இருப்பதால் எடப்பாடி பழனிசாமி கடுமையாக அப்செட் ஆகியுள்ளாராம். இந்த விஷயங்களை திமுக ஐடி விங் ஊதிப் பெரிதாக்குவதாகவும், நாம் அதில் பின்தங்கி இருக்கிறோம் என்றும் தனது ஆதரவாளர்களிடம் ஆதங்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆளுங்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை நாமும் தீவிரமாக சமூக வலைதளங்களில் கொண்டு செல்ல வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஐ.டி நிர்வாகிகளுக்கு அறிவுரை
இந்நிலையில் தான் ஐடி விங் நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களோடு இன்று ஆலோசனை நடத்தியுள்ளார் ஈபிஎஸ். ஈரோடு கிழக்கு தொகுதி நகர்ப்புற பகுதி. சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம் இருக்கும். அதில் நாம் பின்தங்கி இருக்கிறோம். நமக்கு எதிராக திமுகவினர் ட்ரெண்ட் செய்வது தொடர்ந்தால் தேர்தலில் நமக்கு சிக்கலை கொடுக்கும். திமுகவிற்கு எதிரான விஷயங்களை சமூக வலைதளங்களில் கொண்டு செல்லுங்கள், இன்னும் ஒரு வாரம் தான் நமக்கு டைம் இருக்கிறது. ஆளுங்கட்சி மீதான குற்றச்சாட்டுகளை எந்தெந்த வகையில் எல்லாம் சோஷியல் மீடியாவில் சேர்க்க முடியுமோ அவற்றை எல்லாம் செய்யுங்கள் என ஈபிஎஸ் ஆலோசனை வழங்கியுள்ளாராம்.
-
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications