அந்த 7 மணி நேரம்.. மேஜையில் பைல்களை எடுத்து வைத்த எடப்பாடி.. யார் அந்த ஒருவர்? பறந்து வந்த உத்தரவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று 7 மணி நேரம் பிரேக் எடுத்து பிரேக் எடுத்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் முக்கியமான பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக விருப்பமனுக்கள் சமர்ப்பிக்கும்படி ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளிடம் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி நேற்றோடு அதிமுக விருப்பமனுக்கள் பெறும் அவகாசம் முடிவு பெற்றது. இதையடுத்து வேட்பாளரை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

குழுக்கள் நியமனம்
இதையடுத்தே 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, டுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜிக்கள் அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது.

எடப்பாடி தீவிரம்
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். மொத்தமாக 7 மணி நேரம் பிரேக் எடுத்து பிரேக் எடுத்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். விருப்பமனு தாக்கல் செய்த நிர்வாகிகளை பற்றிய பைலை மேஜையில் வைத்து அதை பிரித்துக்கொடுத்து ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இதை பற்றி எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்துள்ளார்.

ஆலோசனை என்ன செய்தார்?
இதில் விருப்பமனு தெரிவித்து இருக்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் லிஸ்ட் எடுத்து அதில் ஜாதி வாரியாக ஆதரவு அதிகம் இருக்கும் நிர்வாகிகள் பெயரை தனியாக எடுத்துள்ளனர். அதில் மக்கள் ஆதரவு நிர்வாகி யார் என்று பட்டியல் எடுத்துள்ளனராம். இதில் தேர்தலுக்கு செலவு செய்ய தயாராக இருக்கும் நிர்வாகியை தேர்வு செய்ய நேற்று ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர். இதில் மாஜி அமைச்சர்கள் இரண்டு பேரின் பெயரை எடப்பாடி பழனிசாமி தரப்பு லிஸ்ட் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரச்சாரம்
இந்த இடைத்தேர்தலில் பெரும்பாலும் மைனாரிட்டிகள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள். அதோடு அதிமுக பாஜகவோடு நெருக்கமாக இருப்பதால் மைனாரிட்டிகள் வாக்குகள் திமுக கூட்டணிக்கே வரும். அதேபோல் தாழ்த்தப்பட்ட மக்கள் விசிக கூட்டணி காரணமாக திமுகவிற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்புவது எப்படி என்பது தொடர்பாக எடப்பாடி ஆலோசனை செய்து இருக்கிறாராம். பாஜகவுடன் நாம் நெருக்கமாக இருப்பதை காட்டிக்கொள்ள கூடாது. பாஜகவிற்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
-
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications