7+8.. அடித்து தூக்கும் எடப்பாடி.. என்ன மாதிரி வேகம்! இன்றே வேட்பாளரை அறிவிக்கிறாராமே! அப்போ ஓபிஎஸ்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக விருப்பமனுக்கள் சமர்பிக்கும்படி ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளிடம் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்தே 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது.

குழு அமைப்பு
தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜிக்கள் அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது. இன்னொரு நேற்று முதல்நாளோடு அதிமுக விருப்பமனுக்கள் பெறும் அவகாசம் முடிவு பெற்றது. இதையடுத்து வேட்பாளரை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

ஆய்வு
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் நாள் ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். முக்கியமாக ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்வில் இடம்பெற்று இருந்தனர். மொத்தமாக 7 மணி நேரம் பிரேக் எடுத்து பிரேக் எடுத்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். விருப்பமனு தாக்கல் செய்த நிர்வாகிகளை பற்றிய பைலை மேஜையில் வைத்து அதை பிரித்துக்கொடுத்து ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் நிறை குறைகளை குறிப்பிட்டு, அவர்கள் ஜாதி, மக்கள் ஆதரவு, செலவழிக்கும் திறன், கட்சியில் உள்ள செல்வாக்கு என்று பல விஷயங்களை குறிப்பிட்டு ஆலோசனை செய்துள்ளனர். இதையடுத்து பின்னர் நேற்று எடப்பாடி ஆலோசனை செய்தார்.

8 மணி நேரம்
நேற்றும் எடப்பாடி பழனிசாமி சார்பாக 8 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. நேற்று முதல் நாள் 7, நேற்று 8 என்று 15 மணி நேரம் எடப்பாடி தீவிரமாக ஆலோசனை செய்து உள்ளார். இதில், இரட்டை இலை நமக்குத்தான். இதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். சட்ட ரீதியாக போராட உள்ளோம். எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆதரவு நம்மிடம் உள்ளது. இதை வைத்து எப்படியும் சின்னத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம் என்று எடப்பாடி நேற்று நடந்த கூட்டத்தில் பேசி இருக்கிறாராம். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி தனது வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன பேசினர்?
ஈரோடு கிழக்கில் பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாமா என்றும் ஆலோசனை செய்து இருக்கிறாராம். அங்கே விருப்பமனு அளித்த 3 முக்கிய பெண் நிர்வாகிகளில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று எடப்பாடி ஆலோசனை செய்து இருக்கிறாராம். அந்த பெண் வேட்பாளர் இல்லை என்றால் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்றும் ஆலோசனை செய்து இருக்கிறார்களாம். இன்றும் சில மணி நேரங்கள் இதை பற்றி ஆலோசனை செய்யப்படும், அந்த ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications