ஈரோடு இடைத்தேர்தல் முறையாக நடக்கவில்லை.. பணநாயகம் வென்றதாக கருதப்படும்.. பாஜக எம்எல்ஏ கருத்து!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் யார் வென்றாலும், பணநாயகம் வென்றதாகவே கருதப்படும் என்று பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்துள்ளார். அதேபோல், ஈரோடு இடைத்தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று விமர்சித்துள்ள அவர், பணம் வாங்காமல் வாக்களிப்பதற்கான மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தேர்தலுக்காக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுகவில் இருந்து தென்னரசு போட்டியிடுகிறார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து மேனகா களமிறங்குகிறார். மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இந்த 77 பேரில் யார் தங்கள் தொகுதியின் பிரதிநிதியாக இருப்பார் என்பதைத் தேர்வு செய்ய மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு மும்முரம்
அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் வேட்பாளர் மேனகா மற்றும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்தனர். காலை 11 மணி நிலவரப்படி, 47.89 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தது வருவது வெளிப்படையாக தெரிகிறது.

பணப்பட்டுவாடா புகார்
அதேபோல் காலையில் திமுக - அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் எழுந்தது. பின்னர் வாக்களித்த பின் வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல் ஒரு வாக்குச்சாவடிகளில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

பணநாயகம் வென்றது
இந்த நிலையில் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எல்எல்ஏ சரஸ்வதி, ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பாஜக எம்எல்ஏ சரஸ்வதி கூறுகையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும். ஏனெனில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பணம் வாங்காமல் வாக்களிப்பதற்கான மன நிலைக்கு மக்கள் மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
Election Exclusive: எல்லாம் போச்சு.. இரட்டை இலையை கருக விட்ட எடப்பாடி! திமுக ’தலைகளை’ லாக் செய்ய லட்டு மாதிரி சான்ஸ்! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக்












Click it and Unblock the Notifications