மச்சினிச்சி வர்ற நேரம்.. ஈரோடு குடிகார "மாமா".. அக்காவுக்காக வயிற்றில் கத்திரிக்கோலை வாங்கிய தங்கை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: கணவன் - மனைவி தகராறை விலக்கி வைக்க முயன்றபோதுதான் இப்படியொரு பரிதாபம் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது ஈரோடு மாவட்டத்தில்?

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் கலைச்செல்வன்.. 58 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார்.. மனைவி பெயர் ஜோதிமணி.. இவருக்கு 55 வயதாகிறது. ஜோதிமணியின் தங்கை பெயர் கல்பனா.. இவருக்கு 36 வயதாகிறது.. அக்கா ஜோதிமணி வசித்த பகுதியிலேயே கல்பனாவும் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

Erode Bavani Sister in law

கலைச்செல்வன்: கலைச்செல்வனுக்கு மதுஅருந்தும் பழக்கம் உள்ளது.. தினமும் வீட்டுக்கு மதுபோதையில் வந்து, ஜோதிமணியிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. சம்பவத்தன்றும் போதையில் வந்த கலைச்செல்வனுக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில் மனைவியை கலைச்செல்வன் சரமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் அடிதாங்க முடியாமல் கதறிய ஜோதிமணி, தன்னுடைய தங்கை கல்பனாவுக்கு போன் போட்டு, கணவன் செய்த அட்டகாசத்தை சொல்லி அழுதுள்ளார்.. உடனே வீட்டுக்கு கிளம்பி வரசொல்லி உள்ளார்.. இதனால், கல்பனா பதறியடித்து கொண்டு அக்கா வீட்டுக்கு வந்தார்.

Erode Bavani Sister in law

சமாதானம்: ஜோதிமணியையும், கலைச்செல்வனையும் சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால், கலைச்செல்வன் ஆவேசம் அடங்கவேயில்லை.. மதுபோதை உச்சத்துக்கு போன நிலையில், அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து, மனைவியை குத்த முயன்றார்..

இதைப்பார்த்து பதறிப்போன கல்பனா, அதை தடுக்க குறுக்கே வந்தார்.. எனவே, கல்பனா மீது ஆத்திரமடைந்த கலைச்செல்வன், கல்பனா வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில், சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் கல்பனா பலியானார்...

மனைவி அலறல்: ஆனால் அப்போதும் ஆத்திரம் அடங்காத கலைச்செல்வன் மனைவியின் வயிற்றில் கத்திரிகோலால் குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் கல்பனா அலறினார்.. அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்கு போராடிய ஜோதிமணியை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திரண்ட உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் கலைச்செல்வனை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.. இதில் படுகாயமடைந்த நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனையில் ஜோதிமணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+