"மைக்ரோ மேனேஜ்மெண்ட்".. ஸ்டாலினுக்கு போன ரிப்போர்ட்.. நேரடியாக ஈரோட்டில் களமிறங்குகிறார்! என்னாச்சு?
ஈரோடு கிழக்கில் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு வட்ட ரீதியாக பணிகள் பிரிக்கப்பட்டு பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.
ஈரோடு: ஈரோடு கிழக்கில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. ஆனாலும் இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கு கேக் வாக்தான். எளிதாக வெல்ல கூடிய வகையிலேயே இடைத்தேர்தல்கள் இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் களநிலவரம் எப்படி இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், ஈரோடு கிழக்கில் என்ன நடக்கும் என்று பதில் தெரியாமல் திமுக, அதிமுகவினர் திக்குமுக்காடி போய் உள்ளனர். அங்கே அதிமுக சின்னம் கிடைத்த பின் வேகமாக பிரச்சாரம் செய்தது. இது தொடர்பாக ரிப்போர்ட் ஒன்று திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கும் சென்றதாக கூறப்படுகிறது. தற்போது திமுகவும் இங்கே வேகமாக செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியின் வேகத்திற்கு எப்போதுமே எதிர்க்கட்சி ஈடு கொடுக்க முடியாது. ஆளும் கட்சியின் வேகத்திற்கு போலீஸ், அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். இனி முதல்வரும் பிரச்சாரம் செய்ய போகிறார். இனி உதயநிதி வேறு பிரச்சாரம் செய்வார்.

நிலைமை
அப்படி என்றால் நிலைமை மாறும். இப்போது வெறும் காங்கிரஸ் வேட்பாளர் என்ற இமேஜ்தான் இருக்கிறது. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு பின் நிலைமை அடியோடு மாறும். திமுக இந்த தேர்தலை முக்கியமானதாக பார்க்கிறது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும். தங்கள் ஆட்சிக்கு இந்த தேர்தல் ஒரு ரேங்க் போல இருக்கும் என்று திமுக நினைக்கிறது. ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரத்திற்கு பின் களநிலவரம் சூடுபிடிக்கும். தேர்தலில் காசு கொடுப்பதாக முன்பு திமுக இடைத்தேர்தல்களின் பபோது புகார் கொடுத்தது. இப்போது அதே புகாரை அதிமுக வைக்கிறது.

இரட்டை இலை
ஈரோடு கிழக்கில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. ஆனாலும் இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கு கேக் வாக்தான். எளிதாக வெல்ல கூடிய வகையிலேயே இடைத்தேர்தல்கள் இருக்கும். அனுப்ப வேண்டிய அமைச்சரை அனுப்பி, மைக்ரோ மேனேஜ்மேண்ட் செய்தால் போதும் ரிசல்ட் கிடைக்கும். அமைச்சர்களுக்கு வட்ட ரீதியாக பணிகள் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். ஒரு அமைச்சர் 30 ஆயிரம் வாக்குகளை பார்த்தாலே போதும். இதனால் தேர்தலுக்குள் ஒரு வாக்காளரை கட்சி நிர்வாகிகள் 2-3 முறை பார்க்க முடியும்.

கோரிக்கை
மக்களின் கோரிக்கைகளை அவசரமாக நிறைவேற்ற முடியும். இதனால் தேர்தலில் ஆளும் கட்சிக்கே சாதகமான முடிவு வரும். கடந்த முறையை விட அதிக வாக்குகள் பெற்று காங்கிரஸ் - திமுக கூட்டணின் வெல்ல வாய்ப்பு உள்ளது. ஆனாலும் ஆளும் கட்சி மீது மக்கள் வருத்தத்தில் உள்ளனர். சொத்து வரி, மின்சார கட்டண உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஈரோட்டில் வடஇந்தியர்கள் பிரச்சனை உள்ளது. இதில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அதிமுகவிற்கு நல்ல வாக்குகள் வரும்.. எனவே அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்கும். இன்னொரு பக்கம் எடப்பாடிக்கு இது முக்கியமான தேர்தல் என்பதால் எடப்பாடி அவரும் தீவிரமாக பணிகளை செய்து வருகிறார். அதனால் அதிமுகவிற்கு கண்டிப்பாக டெபாசிட் கிடைக்கும், என்று பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications