பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை.. பரபர அறிவிப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார்

அறிவிப்பு
இதையடுத்து தற்போது, இந்திய தேர்தல் ஆணையமும் இந்த தொகுதியை காலி என்று அறிவித்துள்ளது. தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். பொதுவாக இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். அதாவது எந்த தேதியில் தொகுதி காலி என்று அறிவிக்கப்படுகிறதோ அதே நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடக்க வேண்டும். பொதுவாக இடைத்தேர்தல் செலவை கட்டுப்படுத்தும் விதமாக பெரிய தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும். வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் இடைத்தேர்தல்கள் தனியாக நடத்தப்படும்.

இடைத்தேர்தல்கள்
ஆனால் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் எதுவும் அடுத்த 6 மாதங்களுக்குள் நடக்க வாய்ப்பு இல்லை. இதனால் இன்று அறிவிக்கப்பட்ட உள்ள மற்ற மாநில தேர்தல்களுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உள்ளது. நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் திரிபுரா சட்டசபைக்கு பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடக்கும். நாகாலாந்து, மேகாலயா சட்டசபைக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடக்கும். 3 மாநில சட்டசபை தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி
இந்த ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர் போட்டி
கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை விட 9 ஆயிரம் வாக்குகள் மட்டும் அதிகம் வாங்கி இவர் வெற்றிபெற்றார். இந்த நிலையில்தான் தற்போது இந்த தொகுதி காலி ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா கூட்டணி எப்படி அமையும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இங்கே யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பது இந்த இடைத்தேர்தலில் உறுதியாகிவிடும். திமுக சார்பாக இங்கே வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்களா அல்லது காங்கிரஸ் வேட்பாளர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல்
அதே சமயம் அதிமுக கூட்டணியில் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இடையே மோதல் உள்ளது. தமிழ் மாநில காங்கிரசும் அதிமுகவுடன் நெருக்கமாக இல்லை. இதனால் அதிமுக இங்கே கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்குமா அல்லது தனியாக இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தனியாக களமிறக்கினாலும் உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. ஓபிஎஸ் - இபிஎஸ் மீண்டும் இணைவார்களா அல்லது தனி தனி அணியாக இறங்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்குள் பொதுகுழு வழக்கில் தீர்ப்பு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உட்கட்சி மோதல் காரணமாக பார்ம் பியில் கையெழுத்து போட போகும் அதிகாரம் யாருக்கு உள்ளது, இரட்டை இலை சின்னம் முடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுக்குழு வழக்கில் அதற்குள் தீர்ப்பு வரவில்லை என்றால் அதிமுக சின்னம் முடங்கும் வாய்ப்புகளும் உள்ளன. அதனால் இந்த தேர்தல் அறிவிப்பு அதிகம் கவனம் பெற்றுள்ளது. இது போக மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணையுமா? அமமுக, தேமுதிக கட்சிகள் என்னென்ன செய்யும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. நாம் தமிழர் கட்சி போட்டியிடுமா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications