ஈரோடு இடைத்தேர்தல்.. இவிஎம்மில் தேமுதிக முதலிடம்.. பின்தங்கிய நாம்தமிழர்..காங்., அதிமுக எந்த இடம்?

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலிடத்தில் தேமுதிக வேட்பாளரின் போட்டோவும், முரசு சின்னமும் இட

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தான் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முதலிடத்தில் தேமுதிகவின் முரசு சின்னம் இடம் பெற உள்ள நிலையில் அதன்பிறகு தான் காங்கிரஸ், அதிமுகவின் சின்னங்கள் இடம்பெற உள்ளது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சி மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு வரும் 27 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்பட்து. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவரொவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்பட 120க்கும் அதிகமானவர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதில் 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

77 வேட்பாளர்கள் போட்டி

77 வேட்பாளர்கள் போட்டி

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இறுதிக்கட்ட வேட்பளர் பட்டியல் படி காங்கிரஸில் இவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியில் மேனகா உள்ளிட்டவர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தற்போது 77 வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு ஓட்டுச்சாவடிக்கு 5 இவிஎம்

ஒரு ஓட்டுச்சாவடிக்கு 5 இவிஎம்

இந்நிலையில் தான் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்(இவிஎம்) பற்றியும், அதில் வேட்பாளர்களின் பெயர்களை வரிசைப்படுத்துவது தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 238 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காக 286 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 310 விவிபேட் ஒதுக்கப்பட்ட நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் வேட்பாளர்களின் எண்ணிக்கை 77 ஆக உள்ளது. இதனால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவையானதாக உள்ளன. இதனால் 1,100 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

முதலிடத்தில் தேமுதிக சின்னம்

முதலிடத்தில் தேமுதிக சின்னம்

மேலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் எதன் அடிப்படையில் கட்சிகள் வரிசைப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்களின் அகரவரிசைப்படி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தப்பட உள்ளது. அதன்படி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தேமுதிகவின் வேட்பாளர் ஆனந்தின் படமும், அவருக்கான முரசு சின்னமும் இடம்பெற உள்ளது. 2வது இடத்தில் திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் படமும், கை சின்னமும் இடம்பெற உள்ளது. மூன்றாவதாக அதிமுக வேட்பாளர் தென்னரசு படமும், இரட்டை இலை சின்னமும் இடபெறவுள்ளது.

22வது இடத்தில் நாம் தமிழர்

22வது இடத்தில் நாம் தமிழர்

இந்த பட்டியலில் பெயர் அடிப்படையிலான அகரவரிசைப்படி 22வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவின் பெயரும், கரும்பு விவசாயி சின்னமும் இடம்பெற உள்ளது. அதாவது இவிஎம் இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை பொதுமக்கள் தேடிப்பிடித்து ஓட்டு செலுத்தும் சூழல் ஏற்படலாம். இது நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

சுயேச்சைகளுக்கு சின்னம்

சுயேச்சைகளுக்கு சின்னம்

இந்த 4 வேட்பாளர்கள் தவிர பிற 73 வேட்பாளர்களுக்கு பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் போட்டியிடாததால் அதன் சின்னங்கள் பிற வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி அமமுக பயன்படுத்திய குக்கர் சின்னம் கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கேபிஎம் ராஜாவுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் டார்ச்லைட் விஸ்வபாரத் மக்கள் கட்சி வேட்பாளர் வேலுமணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பலாப்பழம், அன்னாசி, தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறி, பழங்களும், மிதிவண்டி, கத்தரி, இஸ்திரி பெட்டி உள்ளிட்டவைகளும் சுயேச்சைகளுக்கு சின்னங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+