காங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்தது போதும்.. ஈரோடு ’கிழக்கில்’ உதயசூரியனே உதிக்கட்டும்! குமுறும் உ.பி.கள்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து பிப்ரவரி 5ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இருமுறை காங்கிரஸ் கட்சிக்காக வேலை பார்த்த நிலையில், இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும் என்கின்றனராம் திமுக உடன்பிறப்புகள்.. மேலும், தேர்தலில் போட்டியிட 2, 3 வேட்பாளர்களும் தயாராக உள்ளனராம்..
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர்14ஆம் தேதி உயிரிழந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்:
அவரின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5ல் தேர்தல்:
நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி நிறைவடையும் எனவும், 18ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனக் கூறியுள்ளார். வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 20ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது.
திமுக போட்டி:
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும், திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என அந்த கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியிருக்கிறார். ஆனால் இந்த முறை ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்கின்றனர் ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள்.
உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு:
ஏற்கனவே கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கிய போது இரண்டு முறை கூட்டணி கட்சிக்காக வேலை பார்த்தோம். ஒருமுறை அல்ல ஒரே ஆட்சிக்காலத்தில் இரண்டு முறை காங்கிரஸ்காக வேலை பார்த்திருக்கிறோம்.. திருமகன் ஈவேரா, அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்காக தேர்தல் வேலை செய்திருக்கிறோம். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட திமுகவினரின் உழைப்பு அதிகமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியினர் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை. உள்ளூர் நிர்வாகிகள் மட்டுமே பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். வெளியூரிலிருந்து முக்கிய தலைவர்களை தவிர வேறு யாரும் வரவில்லை..
திமுகவே போட்டி:
மேலும் இடைத் தேர்தலுக்காக செலவும் அதிகமாக செய்ய நேரிட்டது.. எனவே தற்போதைய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளார்களாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் இந்த கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது திமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர்.
வேட்பாளர் யார்?
சமுதாய வாக்கு, ’மேலிடத்தில்’ உள்ள செல்வாக்கு உள்ளிட்டவை காரணமாக முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் மீண்டும் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரது மகன் திருமணத்தில் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். எனவே சந்திரகுமார் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உடன்பிறப்புகள்.
காங்கிரஸ் முயற்சி:
அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இளங்கோவன் குடும்பத்தினர் உயிரிழந்ததால் அனுதாப அடிப்படையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இரண்டாவது மகனான சஞ்சய் சம்பத் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி ஆகியோரும் இடைத்தேர்தலில் களமிறங்க கை நகர்த்தி வருகின்றனர். திமுக தலைமை எடுக்கும் முடிவின் படியே வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என்கின்றனர் ஈரோடு உடன்பிறப்புகள்.
-
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி











Click it and Unblock the Notifications