போட்ரா வெடிய..ஈரோடு கிழக்கில் கொண்டாட்டம் ஆரம்பம்..ஈவிகேஎஸ் இளங்கோவன் கை ஓங்குகிறது..
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்று வருவதை அடுத்து திமுக, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடிக்கத் தொடங்கி விட்டனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார். காங்கிரஸ் கை ஓங்கி வருவதால் முதல் சுற்று முடிவிலேயே வெற்றி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்து விட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி உடல்நலக்குறைவால் திருமகன் ஈவெரா காலமானதையடுத்து, ஈரோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 75 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. 82,138 ஆண்கள், 88,037 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்திருந்தனர். கடந்த தேர்தலைவிட 9 சதவிகித வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை கவனித்தனர். துணி துவைத்துக்கொடுத்து, பாத்திரம் துலக்கி கொடுத்து கூட வாக்கு சேகரித்தனர். பரிசுகளை அள்ளிக்கொடுத்த அரசியல் கட்சியினருக்கு கடும் வெயிலையும் கருத்தில் கொள்ளாமல் இரவு வரை காத்திருந்து வாக்களித்தனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களை வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு மின்னணு எந்திரங்களை அனுப்பி வைத்தனர்.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்பட்டன. பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படுகின்றன.
முதல் சுற்று முடிவிலேயே ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னணியில் இருந்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 9124 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக 2868 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 327 வாக்குகளும், தேமுதிக 17 வாக்குகளும் மட்டுமே பெற்றிருந்தது.

வாக்கு வித்தியாசம் படிப்படியாக அதிகரித்து வருவதால் திமுக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இப்போதே வெற்றிக்கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். பல பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து திமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வெற்றி முழக்கமிட்டு வருகின்றன.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications