Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு தொகுதியில் அடிச்சு தூக்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன்..66575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அக்னி வெயிலைப் போல ஈரோடு கிழக்குத் தொகுதியில் அனல் பறந்தது. 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட திருமகன் ஈவேரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தென்னரசுவை விட 66575 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி உடல்நலக்குறைவால் திருமகன் ஈவெரா காலமானதையடுத்து, ஈரோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு உள்பட 77 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 75 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. 82,138 ஆண்கள், 88,037 பெண்கள், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்திருந்தனர். கடந்த தேர்தலைவிட 9 சதவிகித வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருந்தது.

Erode east by election result: EVKS Elangovan will win by a margin of 1 lakh votes

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 66.56 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இடைத்தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் பதிவானது. பரிசுகளை அள்ளிக்கொடுத்த அரசியல் கட்சியினருக்கு கடும் வெயிலையும் கருத்தில் கொள்ளாமல் இரவு வரை காத்திருந்து வாக்களித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு 77.60 சதவீதமும், 2016-ம் ஆண்டு 69.57 சதவீதமும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 66.56 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டு அதிமுகவும், 89-ம் ஆண்டு திமுகவும், 1991-ம் ஆண்டு அதிமுகவும், 1996-ம் ஆண்டு திமுகவும், 2001-ம் ஆண்டு அதிமுகவும், 2006ம் ஆண்டு திமுகவும், 2011-ம் ஆண்டு தேமுதிகவும் வென்ற தொகுதி. கடந்த 2016ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேமுதிக எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் தேமுதிக என்ற பெயரில், திமுக ஆதரவுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட திருமகன் ஈவேரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா பெற்ற வாக்குகள் 58,396 திருமகன் ஈவேரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் கோமதி 11,629 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ராஜ்குமார் 10,005 வாக்குகள் பெற்றார். நோட்டாவிற்கு 1546 வாக்குகள் கிடைத்தன.

திருமகன் ஈவேராவின் மறைவை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு கவனித்தனர். துணி துவைத்துக்கொடுத்து, பாத்திரம் துலக்கி கொடுத்து கூட வாக்கு சேகரித்தனர். அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை கவனித்ததில் கடும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் இரவு வரை வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர். 75 சதவிகித பதிவானது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களை வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். அள்ளிக்கொடுத்த அரசியல் கட்சியினருக்கு வாக்காளர்களும் வஞ்சனையில்லாமல் வாக்குகளை பதிவு செய்தனர். சித்தோடு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்பட்டன. பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படுகின்றன.

Erode east by election result: EVKS Elangovan will win by a margin of 1 lakh votes

முதல் சுற்றில் இருந்தே ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுகவின் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 66575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன். மூன்றாம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி 8474 வாக்குகள் பெற்றது. தேமுதிக 1177 வாக்குகள் மட்டுமே பெற்றது.

வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு காவல் துறை சார்பில் 750 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்று ஆளும் திமுக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. 50 ஆயிரம் வாக்கு வித்தியாசம் என்று ஆரம்பித்து ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார் முதல்வர் மு.க ஸ்டாலின். ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தென்னரசுவை தோற்கடித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+