ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் மொத்தம் 74.79% வாக்குகள் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
10:10 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி கட்சிகள்- வாக்கு சதவீதம்
காங்கிரஸ் INC{64.58%}
அதிமுக ADMK{25.75%}
நாம் தமிழர் NTK (6.35%)
தேமுதிக DMDK{0.84%}
நோட்டா NOTA (0.47%)
10:10 PM
Mar 2, 2023
காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 64.58% வாக்குகள் பெற்று வெற்றி
ஈரோடு பாதை இந்தியாவுக்கான பாதையாக உழைப்போம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
9:44 PM
Mar 2, 2023
Chennai, Tamil Nadu I would like to congratulate the Congress candidate for winning and I hope he will fulfil his promises. This was a temporary test. The 2024 elections will be the real test: K. Annamalai, BJP Tamil Nadu President on Erode Assembly By-Poll Result pic.twitter.com/rae9g2pi9Z
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி தற்காலிகாமனதே; 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல்தான் உண்மையான தேர்தல் களம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
9:40 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி: வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்டார் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
9:02 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி குறித்து, முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் அங்கீகரிக்கும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. ஈரோடு பாதை இந்தியாவுக்கான பாதையாக உழைப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
8:22 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி - எடப்பாடி பழனிசாமி
8:21 PM
Mar 2, 2023
பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர் - எடப்பாடி பழனிசாமி
5:38 PM
Mar 2, 2023
அதிமுக வேட்பாளர் தென்னரசுவைவிட 63,241 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை
5:37 PM
Mar 2, 2023
ஈரோடு இடைத்தேர்தலில் இறுதி சுற்று- 15-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
5:36 PM
Mar 2, 2023
ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,04,907 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை
5:10 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு: ஈவிகேஎஸ் இளங்கோவன் 97,729; அதிமுக தென்னரசு- 38,790
5:10 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 58,939 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
5:03 PM
Mar 2, 2023
முதல்வரின் பிறந்தநாள் பரிசாக #ஈரோடு_கிழக்குத் தொகுதி வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் அளித்துள்ள மகத்தான அங்கீகாரமாகவும் அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்பதை உணர்த்துவதாகவும் இவ்வெற்றி அமைந்துள்ளது.@EVKSElangovanpic.twitter.com/iS7cgE5HHY
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 2, 2023
முதல்வர் ஸ்டாலினுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி பிறந்த நாள் பரிசு- தொல்.திருமாவளவன்
4:47 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் 13-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
4:44 PM
Mar 2, 2023
ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக இல்லை- ஓபிஎஸ் இல்லாமல் வெல்ல முடியாது: புகழேந்தி
4:43 PM
Mar 2, 2023
தேர்தல் ஆணையர்கள் நியமனம்- உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
4:36 PM
Mar 2, 2023
அதிமுக ஒன்றாக இல்லாமல் இருப்பதால்தான் ஈரோடு கிழக்கு தோல்விக்கு காரணம்: பாஜக அண்ணாமலை
4:36 PM
Mar 2, 2023
எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: நாஞ்சில் சம்பத்
3:50 PM
Mar 2, 2023
இணைய சேவை பிரச்சனையால் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்களை அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் பதிவேற்ற முடியாமல் இருந்த நிலையில் அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது கூடுதலாக கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை பயன்படுத்தி இணையதளத்தில் 7 வது சுற்று ஓட்டு எண்ணிக்கை விபரங்களை பதிவேற்றும் பணி துவங்கி உள்ளது.
3:23 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இணைய சேவை பாதிப்பு காரணமாக தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 6 சுற்று வாக்குப்பதிவுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
3:13 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 48 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மொத்தமாக 76,834 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 ஓட்டுகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்துள்ளார்.
2:49 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 9 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
2:46 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 398 தபால் ஓட்டுகள் பதிவாகின. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 ஓட்டுகளை பெற்றார். அதிமுகவின் தென்னரசுவுக்கு 104 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு 10 தபால் ஓட்டுகளும் கிடைத்தது. மாறாக 67 பேர் ஒரு தபால் ஓட்டுகளை கூட பெறவில்லை. மேலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் கருணாகரனுக்கு 2 தபால் ஓட்டுகள் கிடைத்த நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஒரு தபால் ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். மொத்தம் 25 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
2:40 PM
Mar 2, 2023
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்திப்பின்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அதுபற்றி அவர் கூறுகையில் ‛‛ 2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது பாஜகவுக்கான தேர்தலாகும். ஆளும் கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் வேண்டும் என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது. ஈரோடு கிழக்கில் மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் பெரும்பாலும் ஆளும்கட்சி தான் வெற்றி பெறும். அதுதான் நடந்துள்ளது. திமுக அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் வாக்கு அளித்துள்ளனர் என்பதை ஏற்க மாட்டேன்’’ என்றார்.
2:36 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கில் 9 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70,299 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக அதிமுக வேட்பாளர் தென்னரசு 24,985 ஓட்டுகள் பெற்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான வாக்கு சதவீதம் என்பது 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 4,062 ஓட்டுகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 605 ஓட்டுகளும் பெற்றுள்ளார்.
2:22 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. அவர் 61,432 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் தென்னரசு 22,452 ஓட்டுகள் பெற்று பின்தங்கி உள்ளார். இவரை தொடர்ந்து 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் மேனகா 2,964 ஓட்டுகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 431 ஓட்டுகளும் பெற்று தங்கி இருக்கின்றனர்.
1:53 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கில் உணவு இடைவேளை முடிந்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1:35 PM
Mar 2, 2023
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛ஈரோடு கிழக்கில் வரலாற்றில் பதிவாகக்கூடிய வெற்றியை மக்கள் தந்துள்ளனர். இந்த வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சியை சிறப்போடு நடத்த வேண்டும் என்று மக்கள் ஆதரவு வழங்கி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தன்னை மறந்து பேசிய பேச்சிற்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியை எடை போட்டு வாக்களியுங்கள் என தெரிவித்து இருந்தேன். அதேபோல் மக்கள் எடை போட்டு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்துள்ளனர். விரைவில் நாம் சந்திக்க இருக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. ஆகவே அந்த தொகுதி மக்களுக்கு மீண்டும் ஒருமுறை மதசார்பற்ற கூட்டணி சார்பிலும், திமுக சார்பிலும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.
1:15 PM
Mar 2, 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள் கண்ட வெற்றி வித்தியாசத்தை விட ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார்.
Erode East Election Results 2023 [ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் 2023] LIVE News Updates in Tamil: Find the LIVE News Updates on Erode East By Election Results 2023 in tamil.