அடேங்கப்பா! 64.58 % வாக்குகள்..ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் சரித்திரம் படைத்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் சரித்திரத்தில் முதல் முறையாக ஈவிகேஎஸ் இளங்கோவன் 64.58 % வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 64.58 %வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரலாற்றிலேயே ஒரு வேட்பாளர் 64.58 %வாக்குகளைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். சுமார் 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி வாக்கு விவரம்:
காங். ஈவிகேஎஸ் இளங்கோவன் - 1,10,156 ; அதிமுக தென்னரசு- 43,923; நாம் தமிழர் மேனகா நவநீதன் 10,827; தேமுதிக ஆனந்த் 1432 வாக்குகளைப் பெற்றனர்.
தேர்தல் ஆணைய விவரப்படி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சதவீதம்:
- காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் 64.58%
- அதிமுக 25.75%
- நாம் தமிழர் மேனகா 6.35%
- தேமுதிக ஆனந்த் 0.84%
ஈரோடு கிழக்கு தொகுதியில்
- 2011-ம் ஆண்டு தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: தேமுதிக சந்திரகுமார் 50.83% ; திமுக முத்துசாமி 43.01%; பாஜக ராஜேஷ்குமார் 2.38%
- 2016-ம் ஆண்டு தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: அதிமுக தென்னரசு 43.83%; திமுக சந்திரகுமார் 38.57%; தேமுதிக பொன்சேர்மன் 4.58%; பாஜக ராஜேஷ்குமார் 3.75%
- 2021-ம் ஆண்டு தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: காங். திருமகன் ஈவெரா 44.27; தமாகா யுவராஜா 38.41%; நாம் தமிழர் கோமதி 7.65%; மநீம ராஜ்குமார் 6.98%; அமமுக 0.79%.
- 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக வேட்பாளர் ஒருவர் சுமார் 60%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications