ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்..வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது..நாளை பரிசீலனை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.10ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மாலையுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். 10ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாளாகும்.அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். முதல் நாளில் சுயேட்சைகள் பலர் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். முதல் நாளில் 4 சுயேட்சைகள் மனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2-வது நாளில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் உள்பட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 3-வது நாளாக நடந்த வேட்பு மனு தாக்கலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்பட 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று 4வது நாளாக வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அ.ம.மு.க வேட்பாளர் சிவ பிரசாந்த், ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாளர் செந்தில் முருகன் உள்பட ஒரே நாளில் அதிகபட்சமாக 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன், அவரது மனைவி இளையராணி, அவர்களது ஒரே மகள் சத்யா ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தனர்.
சனிக்கிழமையன்றும் திங்கட்கிழமையன்று சில சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் 6 நாட்கள் வேட்புமனு தாக்கல் நிலையில் நேற்று மாலை வரை 61 பேர் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தென்னரசு இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இதுவரை70க்கும் மேற்பட்டோர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 10ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இரண்டு அணிகளாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி சார்பில் கே.எஸ்.தென்னரசு மற்றும் ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிச்சாமியின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் அதிமுக வின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் ஒப்புதல் கடிதத்தை அனுப்பினார்.

இதனையடைத்து ஒப்புதல் கடிதங்களை பெற்றுக் கொண்டு தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் ஆகியோர் தேர்தல் ஆணையரை சந்தித்து மனுக்களை சமர்பித்தனர்.
2501 பேர் தென்னரசுவிற்கு ஆதரவாக கடிதம் அளித்தனர். இதனையடுத்து தென்னரசு அதிகாரப்பூர்வமான வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.
ஓ.பன்னீர் செல்வத்தால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு பாஜக தனது முழு ஆதரவை அறிவித்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் நேரடி போட்டியில் இருந்தாலும் திமுக படு பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இடைத்தேர்தல் பிரச்சார களம் இனி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications