ஈரோடு கிழக்கில் யார் எம்எல்ஏ? நாளை ரிசல்ட்..15 ரவுண்டுகள்..பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கி வெற்றி சான்றிதழ் வழங்கும் வரை சுமூகமாக அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் அனல் பறந்தது. வாக்காளர்கள் வசமாக கவனிக்கப்பட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு 27ஆம் தேதி நடைபெற்றது. 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு சித்தோடு ஐஆர்டிடி பொறியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்ச் 2ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படும், என மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார். 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கிருஷ்ணன் உன்னி கூறினார்.
நாளை காலை 8 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் சித்தோடு போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் ஆய்வு செய்தார் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு காவல் துறை சார்பில் 750 காவல்துறையினர் பணியில் ஈடுபட உள்ளனர் எனவும் மேலும் ஸ்டராங் ரூம் கண்கானிக்க இரண்டு குழு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் எனவும் கூறினார். இது மட்டுமல்லாமல் துணை ராணுவ படையினர், சிறப்பு காவல் பிரிவினர் ஆகியோர் இரண்டாம்,மூன்றாம் அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதனோடு வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டியவர்களுக்கான அறிவுரைகள் ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும் சுமூகமான முறையில் நடப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை சார்பில் எடுத்து இருக்கிறோம் எனவும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெரும் வரை பாதுகாப்பு அளிக்க தயாராக இருக்கிறோம் எனவும் காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்று ஆளும் திமுக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. அதே நேரத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியோ, வெற்றி தங்களுக்குத்தான் கிடைக்கும் என்று உறுதியாக கூறி வருகிறார். தென்னரசுவா? ஈவிகேஎஸ் இளங்கோவனா? ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்எல்ஏ யார் என்று நாளை தெரிந்து விடும்.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications