ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. மாலை 6 மணியுடன் ஓய்ந்தது பிரச்சாரம்! நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதியான நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. திமுக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பெரியார் குறித்த சீமானின் பேச்சால் நாம் தமிழர் கட்சியினருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்தாண்டு அவர் மறைவடைந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரே ஆட்சி காலத்தில் மூன்று முறை தேர்தல்களை சந்தித்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கின்றனர்.
பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் திமுக முதல் ஆளாக தனது வேட்பாளரை அறிவித்தது. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அவரை எதிர்த்து தமிழகத்தின் ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் அறிவித்ததோடு, சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மூன்று பேரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. எட்டு பேரின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 47 பேர் களத்தில் இருந்த நிலையில், அதில் பத்மாவதி என்பவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
தற்போது திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் திமுக, நாம் தமிழர் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி , உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மீது அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்திரலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துச்சாமி, நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக சீமான் ஆகியோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தந்தை பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சி சீமானின் பேச்சால் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய சீமான் வெடிகுண்டு வீசுவேன் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவர் மீது ஐந்து வழக்குகள் பாய்ந்து இருக்கிறது. மேலும் அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டது, கட்சி கொடிகள் பேனர்கள் வைத்தது உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் காரணமாக நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் மீது பத்துக்கு மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது நாம் தமிழர் கட்சியினருக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் நேற்று சீமானுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களை நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதை அடுத்து மூன்று பேர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தேர்தல் பறக்குமடை அதிகாரி அளித்த புகாரின் பேரில் வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 51 பேரும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க பரபரப்பாக நடந்து வந்த ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. ஆறு மணிக்கு மேல் நேரடியாகவோ மறைமுகமாகவோ சமூக வலைதளங்கள் மூலமோ வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் வெளியூர்களைச் சேர்ந்த நபர்கள் 6 மணிக்கு மேல் தொகுதியில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
40, 50 கோடி செலவு பண்ணுவாங்க.. கையை கட்டிட்டாரு சீமான்! திரள்நிதி தான் கேக்குறாரு!உருக்கமாக வீடியோ -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications