ஈரோடு கிழக்கு.. கடந்த தேர்தலை விட சரிந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம்.. எவ்வளவு தெரியுமா?
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கேஎஸ் தென்னரசு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு அடுத்ததாக 3-வது இடத்தை சீமானின் நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது. எனினும் கடந்த தேர்தலை விட இதன் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார்.
இதையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதேபோல், அதிமுக தரப்பில் கே.எஸ் தென்னரசு போட்டியிடார். இதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி இந்த தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

10 ஆயிரத்து 827 வாக்குகள்
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், முதல் சுற்றில் இருந்தே முன்னிலை பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 43 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் தென்னரசு இரண்டாம் இடத்தை பெற்றார். நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகள் பெற்றார். தேமுதிகவின் ஆனந்த் 1,432 வாக்குகள் பெற்றார்.

கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம்
ஈரோடு கிழக்கில் கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் - திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் - 44.27 வாக்கு சதவிகிதம் பெற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் - யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் - 38.41 வாக்கு சதவிகிதம் பெற்றார். நாம் தமிழர் - கோமதி - 11,629 வாக்குகள் - 7.65 வாக்கு சதவிகிதம் பெற்றார். மக்கள் நீதி மய்யம் - ராஜ் குமார் - 10,005 வாக்குகள் - 6.58 வாக்கு சதவிகிதம் பெற்றார். இந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனின் வாக்கு சதவிகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்கு சதவிகிதம் 64.6 சதவிகிதமாக உள்ளது.

6.36 சதவிகிதமாக குறைந்துள்ளது
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தென்னரசுவின் வாக்குகள் சதவீதம் 25.8 ஆக குறைந்துள்ளது. நாம் தமிழர் கட்சி கடந்த முறை 7.65 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், இந்த முறை பெற்ற வாக்கு சதவிகிதம் 6.36 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக உள்பட 75 வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்தனர். தேமுதிக இந்த முறை 0.84 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. ஒரு சதவீத வாக்குகள் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications