ஈரோடு வாக்காளர்களே நோட் பண்ணிக்கோங்க.. இந்த 12 ஆவணங்களை காட்டியும் ஓட்டு போடலாம்.. முழு விவரம் இதோ!
தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 12 வகையான அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள், தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 12 வகையான அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அது எந்த ஆவணங்கள் என்று இங்கே பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி திடீர் மரணம் அடைந்தார்.
அவரது மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தபப்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

77 வேட்பாளர்கள் போட்டி
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் போட்டியிடுகிறார்கள். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டார்கள். காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

6 மணியுடன் ஓய்ந்த பிரச்சாரம்
அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன்பிறகு தொகுதியில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நேற்று மதியத்தில் இருந்தே ஈரோடு கிழக்கில் இருந்து கிளம்பி சென்றனர்.

அடையாள அட்டை இல்லாவிட்டாலும்
தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேறிவிட்டார்களா என்பதை போலீசாரும் கண்காணித்தனர். இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள், தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 12 வகையான அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அது எந்த ஆவணங்கள் என்று இங்கே பார்க்கலாம்.

12 வகையான அடையாள ஆவணங்கள்
ஆதார் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய பேங்க், போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்ட் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட்டு கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய -மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, எம்.பிக்களாக இருந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடி மையத்திற்கு கொண்டு வந்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications