ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. மீண்டும் திமுக பக்கம் திரும்பிய அரசு ஊழியர்கள்? குஷியில் உடன்பிறப்புகள்
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் இடைத்தேர்தல் நடந்தது. அங்கே 65.72% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் இங்கே 75 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட இந்த முறை 10 சதவிகிதம் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து பெரிய கட்சிகள் அடுத்தடுத்து விலகியதால் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. பாஜக இதில் போட்டியிடவில்லை. அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல் தேமுதிகவும் போட்டியிடவில்லை. காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது. முன்னதாக கடந்த வருடம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வென்றாலும் தபால் வாக்குகளில் தொடக்கத்தில் மட்டும் கொஞ்சம் சரிவை சந்தித்தது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த லோக்சபா தேர்தலிலேயே இது திமுகவிற்கு எதிராக இருந்தது.
கடந்த லோக்சபா தேர்தலிலேயே, அதனால் கடும் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கு உதாரணமாக, தபால் வாக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள். தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும் வயதில் மூத்தவர்களும் தபால் வாக்குகள் பதிவு செய்ய வழி வகை உண்டு. அந்த வகையில், முதியவர்கள் வாக்களித்தனர். எண்ணிக்கையின்படி இது மிக குறைவு. ஆனால், தேர்தல் பணிகளில் ஈடுப்பட்ட அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் முழுமையாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அவர்கள்தான் லோக்சபா தேர்தல், விக்கிரவாண்டி தேர்தலில் திமுகவிற்கு எதிராக வாக்களித்ததாக கூறப்பட்டது. ஆனால் தபால் வாக்குகளில் தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தபால் வாக்குகளில் முன்னிலை வகிக்கிறது. நாம் தமிழர் இருந்தும் தொடர்ந்து தபால் வாக்குகளில் திமுக முன்னிலை வைக்கிறது. பழைய பென்ஷன் முறையை கொண்டு வர திமுக தீவிரமாக இருப்பதால் அரசு ஊழியர்களின் ஆதரவு திமுகவிற்கு மீண்டும் வந்துள்ளதோ என்ற விவாதம் உடன்பிறப்புகள் இடையே எழுந்துள்ளது.
அதிமுக புறக்கணிப்பு:
இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துவிட்டது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, வி.சி.சந்திரகுமார் (தி.மு.ககொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக ஈரோடு கிழக்கு ஏன் புறக்கணிப்பு:
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலோடு சேர்த்து 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், கடந்த லோக்சபா தேர்தல் என மொத்தம் 10 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. அது அனைத்திலும் தோல்வி அடைந்தது.
இந்த மோசமான தோல்வியடைந்தால் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று ஆகிவிடும் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக தவிர்த்து பிரபலமான கட்சி என்றால் நாம் தமிழர் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications