ஈரோடு மைதிலி, போயும் போயும் பணத்துக்காக.. வாரிசு சான்றிதழ் வழங்க, அரசு அதிகாரிகளின் தொடர் "டிமாண்டு"
ஈரோடு: தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் லஞ்சம் பெறுவோரின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில், ஈரோடு மாவட்டத்திலும் லஞ்சம் வாங்கி சிக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.. இது மாவட்ட மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.
லஞ்ச புகார்களை களைவதற்கான முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதேபோல, போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. ஆனாலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது..

குற்றச்சாட்டு: இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகியும் வருகிறார்கள். இதில் பெண் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் வாங்கி கைதாகி அசிங்கப்படுவது அதிகரித்து வருகிறது.. அந்தவகையில், திருப்பூர் மாவட்டம் பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது.
திருப்பூர் முத்தனம்பாளையம் கிராமம் ரங்கேகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா.. 28 வயதான ஜீவா, ஒரு காய்கறி வியாபாரியாவார்.. இவரது அப்பா ராஜேந்திரனை, கடந்த பிப்ரவரி 16ம் தேதி மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டனர்.
ஆவணங்கள்: எனவே, இந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. குறிப்பாக, இதற்கு தேவையான ஆவணங்களை வருவாய்த்துறை அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், ஜீவாவிடம் வாரிசு சான்றிதழ் இல்லாததால், திருப்பூர் தெற்கு தாலுகா, நல்லூரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக நல்லூர் வருவாய் ஆய்வாளரான மைதிலியிடம் அணுகியிருக்கிறார்.. ஆனால், வாரிசு சான்றிதழ் தரவேண்டுமானால், ஜீவாவிடம் ரூ.7,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு தன்னால் பணம் தர முடியாது என்று ஜீவா கூறியிருக்கிறார். இதனால் மைதிலி, ரூ.2000 தரும்படியாவது கேட்டுள்ளார். எனவே, லஞ்ச ஒழிப்பு துறையிடம் சென்ற ஜீவா, மைதிலி மீது புகார் அளித்தார்.
அறிவுறுத்தல்: போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை ஜீவா வருவாய் ஆய்வாளர் மைதிலியிடம் வழங்கியிருந்த நிலையில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மைதிலியை கையும், களவுமாக பிடித்து கைது செய்திருந்தனர்.. இதையடுத்து, லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் மைதிலியை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடத்திய அதிரடி ஆய்வின் போது, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆசனூர் விஏஓ: அதேபோல, சமீபத்தில்தான், வாரிசு சான்றிதழ் வழங்க, ரூ.45,000 லஞ்சம் பெற்ற ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்திருந்தனர். திருப்பூர் மாவட்டத்தில், இப்படி வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் தொடர்ந்து கைதாகி வருவது, அம்மக்களை மிகப்பெரிய கவலைக்குள்ளாக்கி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications