வாழைத்தோப்பில் 3 அடி குழியில்.. நிர்வாணமாக உட்கார்ந்தபடி புதைக்கப்பட்ட பெண்.. ஈரோட்டில் அதிர்ச்சி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சமீப காலமாகவே இந்தியாவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், நேற்றைய தினம் இந்த கொடுமை கோபியில் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் மோப்பநாயை கொண்டும், செல்போன் சிக்னல்களை வைத்தும் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்றுகூட ஒரு பயங்கரமான கொலை பெங்களூருவில் நடந்துள்ளது.. 36 வயது பெண்ணுக்கு 17 வயதில் மகள் இருக்கிறாள். அந்த மகள் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த 17 வயது சிறுமி, 17 வயது சிறுவனை காதலித்துள்ளார். இதை சிறுமியின் தாய் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட சிறுமி, காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயை கொலை செய்திருக்கிறார்.
இதற்காக காதலனுடன் சேர்த்து 4 சிறுவர்கள் மாணவிக்கு உதவியிருக்கிறார்கள். மொத்தம் 5 பேர் சேர்ந்து அம்மாவின் கழுத்தை நெரித்து கொன்று, உடலை படுக்கை அறைக்கு இழுத்து சென்று, கழுத்தில் சேலையால் கட்டி, சடலத்தை ஃபேனில் தொங்கவிட்டுள்ளார்கள்.
ஈரோட்டில் கோபியில் அதிர்ச்சி சம்பவம்
சிறுமி உட்பட இந்த கொலையை செய்த யாருக்குமே 18 வயதாகவில்லை.. இதில், ஒரு சிறுவனுக்கு 13 வயது தான் ஆகிறதாம். இந்த பயங்கர சம்பவத்தின் அதிர்ச்சி விலகாத நிலையில், மற்றொரு கொலை ஈரோட்டில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ளது கெட்டிசெவியூர்.. இங்கு மோகன் என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது.. இதில், வாழை, சோளம் போன்றவற்றை பயிரிட்டுள்ளார்.
மேலும் இதே தோட்டத்தில் காளான் வளர்வதால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள், மோகன் வீட்டுக்கு காளான் பறிக்க வருவார்கள்.. மேலும், தோட்டத்தில் கிடக்கும் தீவனங்களையும் தங்களது கால்நடைகளுக்காக சேகரித்து கொண்டு போவார்கள்.
வாழைத் தோப்பில் குழி
அப்படித்தான் நேற்றைய தினமும் முருகேசன் என்பவர், மோகனின் வாழைத்தோப்பிற்கு வந்துள்ளார்.. அப்போது அந்த பகுதி முழுவதுமே ரத்தக்கறையாக காணப்பட்டது.. தோட்டப்பகுதி எல்லாம் ரத்தம் சிந்தியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.. பிறகு அதே தோட்டத்தில் ஏதோ குழிதோண்டி மூடப்பட்டதற்கான அடையாளமும் இருந்தது,.
இதைப்பார்த்து பதறிப்போன முருகேசன், உடனடியாக மோகனுக்கு தகவல் தந்தார்.. தோட்ட உரிமையாளர் மோகனும் உடனடியாக விரைந்து வந்து, ரத்தம் சிதறிக்கிடப்பதை கண்டு, சிறுவலூர் போலீசாருக்கும், நம்பியூர் தாசில்தாருக்கும், உடனே பெருந்துறை அரசு மருத்துவர் நந்தகுமாருக்கும் தகவல் அளித்தார்.
சிறிது நேரத்தில் அதிகாரிகள் விரைந்து வந்த நிலையில், அவர்கள் முன்னிலையில், அந்த குழி தோண்டப்பட்டது. அப்போதுதான், சுமார் 3 அடி ஆழத்தில் உட்கார்ந்த நிலையில் பெண்ணின் சடலம் நிர்வாணமாக இருப்பதை கண்டு மொத்த பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வாழைத் தோட்டத்தில் பெண்
கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு 30 வயதிருக்கும் என தெரிகிறது. அப்பெண்ணின் தலையில் கல்லால் தாக்கியும், சிறிய கத்தியால் கழுத்தில் குத்தியும் கொன்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சடலம் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களும் கிடந்திருக்கின்றன.. பெண்ணை கொலை செய்தபிறகு சடலத்தை தோட்டத்தில் கொன்று வந்து புதைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாரிந்த பெண்? போன் சிக்னல்
ஆனால், கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது தெரியவில்லை.. அந்த பெண்ணை பற்றிய அடையாளம் தெரிந்தால்தான், அவரை கொன்றவர்களை கண்டுபிடிக்க முடியும் என்பதால் அதற்கான விசாரணை நடந்து வருகிறது. இதற்காக செல்போன் சிக்னல், வாகனங்களின் பதிவு எண்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications