ஈரோட்டில் செங்கோட்டையன் பற்றி.. அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பேசிய வார்த்தை.. இப்போது சிக்கல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 75 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனந்தராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறைகளுக்கு இருக்கைகள் வழங்கும் விழாநடந்தது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார். அவரை தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்று பேசியதுடன், புகழ்ந்து பேசினாராம்.. இந்த வீடியோ வைரலான நிலையில் தலைமை ஆசிரியர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளி கட்டி 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்பியூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனந்தராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வகுப்பறைகளுக்கு இருக்கைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்று பேசியுள்ளார். அவர் அப்போது பேசுகையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து 40 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அவரை வென்றிட இங்கே யாரும் இல்லை என்று புகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் விழாவில் மதம் சார்ந்த பாடல்களை ஒலிபரப்பவிட்டாராம். மேலும் அந்த பாடல்களை மாணவர்களை திரும்ப பாடச்சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்த விவகாரம் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ்வின் கவனத்திற்கு நெட்டிசன்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி சுப்பாராவ் தலைமையில் அதிகாரிகள் நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் ஆனந்தராஜிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரை பவானி அருகே உள்ள தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ் உத்தரவிட்டார். இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications