இந்து மாணவிகளின் நலனுக்காக.. பள்ளியில் கந்த சஷ்டி பாட அனுமதி கொடுங்க! இந்து முன்னணி கலெக்டரிடம் மனு
ஈரோடு: இந்து மாணவிகளின் நலனுக்காக என்று இந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு பேசுபொருள் ஆகி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருந்தது அனைவருக்கும் நிச்சயம் ஞாபகம் இருக்கும்.
இதனால் பல வாரங்கள் அங்குப் பதற்றமான ஒரு சூழல் காணப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், இப்போது தான் அந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

மனு
தமிழ்நாட்டில் நல்வாய்ப்பாக அதுபோன்ற சிக்கல் எதுவும் வரவில்லை. இதனிடையே ஈரோட்டில் முன்னாள் திமுக கவுன்சிலர் சந்திரசேகர் கருங்கல்பாளையம் பள்ளி ஆசிரியருக்குத் தொழுகை நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாகக் கடிதம் எழுதி இருந்தார். இதனிடையே இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்து முன்னணியினரும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

திமுக முன்னாள் கவுன்சிலர்
ஈரோடு மாநகராட்சி முன்னாள் திமுக கவுன்சிலர் சந்திரசேகர். இவர் கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், "இப்போதும் நமது பள்ளியில் இஸ்லாமியப் பெண்கள் மிகுந்த அளவில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு மதியம் 10 நிமிடங்கள் தொழுகை நடத்திட தாங்கள் அனுமதி வழங்கி உதவிட மாணவிகளின் பெற்றோர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்து முன்னணி
இருப்பினும், இந்த கோரிக்கைக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், திமுக முன்னாள் கவுன்சிலர் இப்படியொரு கோரிக்கையை வலியுறுத்தி பள்ளி நிர்வாகத்திற்கு எப்படி கடிதம் எழுதலாம் என்று இந்து முன்னணியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், இதற்குப் போட்டியாக கலெக்டர் அலுவலகத்தில் மற்றொரு மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு
இந்து முன்னணியினர் ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த கடிதத்தில், "வணக்கம். ஜூலை 6ஆம் தேதி, திமுக முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் என்பவர் ஈரோடு கருங்கல் பாளையம் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் மிகுந்த அளவில் சேர்ந்து பயின்று வருவதாகவும், இஸ்லாமிய மாணவிகள் தினசரி மதியம் 10 நிமிடங்கள் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்வதாகக் கடிதம் எழுதியாகத் தெரிகிறது.

அனுமதி அளித்தால்
இக்கடிதம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா? அப்படி அனுப்பி இருந்தால் தலைமை ஆசிரியரின் முடிவு என்ன? இஸ்லாமிய மாணவிகள் தொழுகை அனுமதி அளித்தால் இந்து மாணவிகளின் நலனுக்காக இந்து மாணவிகள் தினசரி மதியம் 15 நிமிடங்கள் ஹயக்ரீவர் மந்திரம், கந்த சஷ்டி பாடவும் படிக்கவும் இந்து மாணவர்களுக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கந்த சஷ்டி கவசம்
ஒரு மதத்திற்கு மட்டும் வழிபாட்டிற்குப் பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தால் பள்ளி மாணவர்களுக்கிடையே இந்து மாணவிகளின் மத சுதந்திரம் கேள்விக்குறியாகும். எனவே இந்து மாணவிகள் நன்கு படிக்கவும் தைரியமாக அச்சமின்றி படிக்கும் கந்த சஷ்டி பாடவும் படிக்கவும் தினசரி 15 நிமிடங்கள் அனுமதி அளிக்குமாறு இந்து மாணவிகள் நலன் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications