ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மூடப்படும் தங்கும் விடுதிகள்.. அதிரடியாக பறந்த நோட்டீஸ்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள், புலிகள் சிறுத்தைப்புலிகள், மான்கள், கரடிகள், செந்நாய்கள் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த புலிகள் காப்பகத்தில் உள்ள சட்ட விரோத தங்கும் விடுதிகள் 13-ந் தேதிக்கு உரிமம் பெறவில்லை என்றால் மூடப்படும் என்று அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள், புலிகள் சிறுத்தைப்புலிகள், மான்கள், கரடிகள், செந்நாய்கள் என ஏராளமான விலங்குகள் இருக்கிறது. இந்த புலிகள் வனப்பகுதியையொட்டி தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் ஆகிய ஊராட்சிகளில் 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் என்பவர் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தேசிய வனவிலங்கு வாரியம் மலைப்பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல் சத்தியமங்கலம் புலிகள் சரணாலத்தில் சட்டவிரோத தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து 4 வாரத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம் ஆகிய பகுதியில் உள்ள 42 சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் விடுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சட்டவிரோத விடுதிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை வருகிற 19-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் சட்டவிரோத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் ஈரோடு கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று எச்சரித்தனர்.
இதையடுத்து ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக்குட்பட்ட தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். தங்கும் விடுதிகள் வைத்திருப்போர் வருகிற 13-ந் தேதிக்குள் உரிய அனுமதி பெறவேண்டும். இல்லை என்றால் அவைகள் மூடப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications