குலுங்கிய ஈரோடு.. தாய்ப்பால் கொடுத்து கொண்டிருக்கும்போதே உயிரிழந்த இளம்பெண்.. "வீல்" என கதறிய குழந்தை
ஈரோடு: தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோதே, இளம்தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது கவுந்தப்பாடி சின்னியம்பாளையம்.. இங்கு வசித்து வருபவர் மதன்குமார்.. இவரது மனைவி பெயர் பூரணி.

இளம்தாய் பூரணி : இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது... இந்த குழந்தைக்கு, இன்று காலை பூரணி தன்னுடைய வீட்டில் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது..
கணவன் அதிர்ச்சி: இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூரணியின் கணவர் மதன்குமார், பதறி துடித்து, அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடினார்.. பிறகு, உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்கு பூரணியை அழைத்து சென்றிருக்கிறார்.. ஆனால், பூரணியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள், தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தபோதே பூரணிக்கு மயக்கம் வந்துள்ளது..
தாய்ப்பால் கொடுத்தபடியே, மயங்கி சரிந்துள்ளார்.. மதன்குமார் அவரை எழுப்பி பார்த்தபோதும், அசைவில்லை.. மயங்கிய நிலையிலேயேதான், மருத்துவமனைக்கு பூரணியை கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் உயிர் பிரிந்துவிட்டது என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதைக்கேட்டு, மதன்குமாரும், குடும்பத்தினரும் கதறி கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது. இதனைத் தொடர்ந்து பூரணியின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது..
போஸ்ட்மார்ட்டம்: பூரணிக்கு உடல்நல பாதிப்பு ஏற்கனவே இருந்ததா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று உடனடியாக தெரியவில்லை. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தால்தான், முழு விவரமும் தெரியவரும். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது, இளம்தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications