ஈரோடு லோக்சபா தொகுதி: பெரியார் மண்ணில் பெருவெற்றி பெறப் போவது யார்? கடும் போட்டியில் திமுக- அதிமுக!
ஈரோடு: திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் பிறந்த ஈரோடு லோக்சபா தொகுதியில் திராவிட கட்சிகள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. திமுகவும் அதிமுகவும் கொடிகட்டிப் பறக்கும் ஈரோடு தொகுதியில் களம் அனல் பறக்கிறது.
ஈரோடு லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகள்: ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம், தாராபுரம். இந்த 6 சட்டசபை தொகுதிகளில் 3 திமுக வசம் உள்ளன. அதிமுக, பாஜக, காங்கிரஸிடம் தலா ஒரு தொகுதிகள் உள்ளன. ஈரோடு, திருப்பூர், நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களின் தொகுதிகளை உள்ளடக்கியதாக ஈரோடு லோக்சபா தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

ஈரோடு தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,28,241; ஆண்கள்- 7,40,298
பெண்கள்- 7,87,762; 3-ம் பாலினத்தவர்- 181.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
அ. கணேசமூர்த்தி(மதிமுக) 2,84,148
ஈவிகேஎஸ் இளங்கோவன்(காங்கிரஸ்) 2,34,812
பாலசுப்பிரமணியம் (கொமுபே)1,06,604
முத்து வெங்கடேஸ்வரன்(தேமுதிக)91,008
என். பி. பழனிசாமி பாஜக (8,429)
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
எஸ். செல்வக்குமார் சின்னையன்(அதிமுக) 4,66,995
அ. கணேசமூர்த்தி (மதிமுக) 2,55,432
எச். பவித்திரவள்ளி (திமுக) 2,17,260
பி. கோபி(காங்கிரஸ்) 26,726
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
அ. கணேசமூர்த்தி(திமுக) 5,63,591
மணிமாறன்(அதிமுக)3,52,973
சரவணக்குமார்(மக்கள் நீதி மய்யம்) 47,719
மா. கி. சீதாலட்சுமி(நாம் தமிழர் கட்சி)39,010
செந்தில் குமார்(அமமுக) 25,858
2024-ம் ஆண்டு தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்
பிரகாஷ் (திமுக)
ஆற்றல் அசோக்குமார் (அதிமுக)
விஜயகுமார் (தமாகா)
கார்மேகன் (நாம் தமிழர்)
ஈரோடு தொகுதி நிலவரம் என்ன? : முன்னர் திருச்செங்கோடு தொகுதியாக இருந்த போது திமுக, அதிமுக மாறி மாறி வென்ற தொகுதி. இத்தொகுதியில் நெசவு, விவசாயம் முதன்மைத் தொழில். கொங்கு வேளாள கவுண்டர்கள் அதிகம் உள்ள தொகுதி. முதலியார், வேட்டுவ கவுண்டர், தலித்துகள், வட இந்தியர்கள், நாடார்கள், வன்னியர்கள் சிறுபான்மையினரும் கணிசமான வாக்காளர்கள். சாயக்கழிவு நீர், சுற்றுச்சூழல் பாதிப்பு, காவிரி மாசு, செங்காதள் மலர் விலை பிரச்சனை, முருங்கை சாகுபடி சிக்கல்கள், கீழ்பவானி வாய்க்கால் பிரச்சினை என பட்டியலிடுகின்றனர் வாக்காளர்கள். அதேபோல ஈரோடு- பழனி ரயில் திட்டம் குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பதும் முதன்மை கோர்க்கை. ரேஷன் கடைகளில் தேங்காய் விற்பனை தங்களுக்கு பேருதவி என்கின்றனர் வாக்காளர்கள். தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு. இத்தொகுதியில் திமுக, அதிமுக வலுவான வாக்கு வங்கிதான். ஆனாலும் மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் பாஜக வென்றது. களத்தில் பாஜகவுக்காக தமாகா நின்றாலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் திமுக- அதிமுக பக்கமே வாக்காளர்கள் நிற்கின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications