மீண்டும் மீண்டுமா! ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திர அறையில் 2வது முறையாக கேமரா பழுது - பரபரப்பு
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‛ஸ்ட்ராங் ரூமில்' இன்று 2வது முறையாக சிசிடிவி கேமராக்கள் இயங்காததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சிசிடிவி கேமராவில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். தமிழகத்தில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவானது.

தேர்தல் முடிவடைந்த பிறகு ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. அந்த மையங்களில் உள்ள ஸ்ட்ராங் அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 அடுக்குகளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை கட்சியின் ஏஜென்ட்டுகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஈரோடு லோக்சபா தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று காலையில் 8 மணி முதல் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராவில் பழுது ஏற்பட்டது.
இதனால் கட்சியின் ஏஜென்ட்டுகளுக்கு அறையின் உள்ளே என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் போனது. இதையடுத்து உடனடியாக தொழில்நுட்ப வல்லூனர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி தற்போது தொழில்நுட்ப வல்லூனர்கள் சிசிடிவி கேமராவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு லோக்சபா தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கேமரா பழுதாகுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு நேற்று முன்தினம் ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதியில் உள்ள பூத்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் சுமார் 30 நிமிடம் வரை சிசிடிவி கேமரா செயல்படவில்லை. அதன்பிறகு சிசிடிவி கேமரா மாற்றம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது 2வது முறையாக ஈரோடு லோக்சபா தொகுதிக்கான ஸ்ட்ராங் ரூமில் கேமரா செயல்படாமல் போய் இருந்தது என்பது நினைவுப்படுத்த வேண்டி உள்ளது.
ஈரோடு லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டி்ல ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி), காங்கேயம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் என மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமார், திமுக சார்பில் கேஇ பிரகாஷ், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார், நாம் தமிழர் சார்பில் கார்மேகம் ஆகியோர் போட்டியில் உள்ளனர். கடந்த 19ம் தேதி நடந்த தேர்தலில் ஈரோடு லோக்சபா தொகுதியில் 70.59 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications