அமெரிக்கா ஏற்றுமதி பாதிப்பு.. சலுகை விலையில் ஜவுளி.. ஈரோடு மக்களுக்கு விபூதி அடித்த பகீர் மோசடி
ஈரோடு: இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதால் தொழில்துறையினர் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். உற்பத்தி முடங்கி, ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், ஈரோட்டில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்வதாக சதுரங்க வேட்டை பாணியில் விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி மக்கள் அங்கு படையெடுக்க, கடைசியில் அங்கு பழைய மற்றும் சேதமடைந்த பொருட்களை வைத்திருந்ததால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபராக பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து, தங்களது பொருளாதாரத்தை சீரமைக்க ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்தது. இதையடுத்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தனர்.

அமெரிக்கா வரி உயர்வு
இதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா விரும்பவில்லை. இது தொடர்பாக இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை ரஷ்யா ராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்துகிறது. இந்தியாவுக்கு எதைப்பற்றியும் அக்கறை இல்லை என்று விமர்சித்திருந்தார். அதனுடன் இந்தியாவை பழிவாங்கும் விதமாக, இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரியை 25 சதவீதம் உயர்த்தி அறிவித்தார் டிரம்ப்.
இது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இந்தியா மீது மேலும் 25 சதவீதம் வரியை உயர்வை திணித்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்த அறிவிப்புகளால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வரி உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலுக்கும் வந்துவிட்டது. இதனால் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிலும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உற்பத்தி, ஏற்றுமதி பாதிப்பு
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பருத்தி, பின்னலாடை உற்பத்தி அதிகளவு உள்ளது. இதில் பல நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். வரி உயர்வால், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. தொழில் நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் பொருட்களை கொடுக்க முடியவில்லை. இதனால் ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, உற்பத்தி முடங்கியுள்ளன.
பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொங்கு மண்டலமே தொழில் முடங்கும் சோகத்தில் உள்ளது. இந்த நிலையிலும் ஒரு பகீர் மோசடி முயற்சி நடைபெற்றுள்ளது. கொங்கு மண்டலம் என்றாலே நாட்டிற்கே அதிர்ச்சி கொடுக்கும் பல நூதன மோசடிகள் நடந்த பகுதியாகும். அமெரிக்கா - இந்தியா பிரச்சனையை வைத்து ஈரோட்டில் ஒரு தகவல் கடந்த சில நாட்களாக பயங்கர வேகமாக பரவியது.
ஆசையை தூண்டிய விளம்பரம்
அமெரிக்காவில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. நம் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு கைக்கொடுக்கும் விதமாக, ஏற்றுமதி செய்ய முடியாத ஜவுளி, காலாணி ஆகியவை சலுகை விலையில் விற்பனை செய்யப்படும். ரூ.3,000 மதிப்பிலான பொருட்கள் 200-300 ரூபாய்க்கும், 8,000 மதிப்பிலான பொருட்கள் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று விளம்பரம் செய்திருந்தனர்.
இதுதொடர்பாக நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இன்று மற்றும் நாளை விற்பனை நடத்தப்படும் என கூறியிருந்தனர். இதை நம்பி பலரும் விளம்பரத்தில் இடம் பெற்றிருந்த திண்டல் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் குவிந்தனர். ஆனால் அங்கு அவர்கள் கூறியதை போல பிராண்டட் பொருட்கள் இல்லாமல் பழைய மற்றும் சேதமடைந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் ஆசை ஆசையாக வந்தவர்கள் ஆத்திரமடைந்தனர்.
அத்தனையும் பொய்யா கோபால்
இதையடுத்து விற்பனையாளர்கள் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாதாரண ஹோட்டல் என்றால் இவ்வளவு கூட்டம் வந்திருக்காது. பிரபல ஹோட்டல் என்பதால் நம்பி வந்தோம். நீங்களும் இந்த மோசடிக்கு துணையா என்று வாக்குவாதம் செய்தனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறை, வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தி விற்பனையாளர்கள், ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஈரோடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications