கண்டக்டர் அசிங்கமா நடந்துக்கிட்டாரு.. கொச்சையா பேசினாரு.. குமுறிய ரீட்டா!
ஓடும் பேருந்தில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது
Recommended Video
ஈரோடு: "அந்த கண்டக்டர் என்கிட்ட அசிங்கமா நடந்துக்கிட்டாரு.. கொச்சையா பேசினாரு.. ஆனா யாருமே இதை தட்டி கேட்கலை" என்று மனம் வருந்தி சொல்கிறார் ஈரோடு ரீட்டா!
ஈரோடு மாவட்டம், சென்னிமலை புளியக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த திருநங்கை ரீட்டா. இவர் தனியார் பேருந்து ஒன்றில் பயணிக்கும்போது, கண்டக்டர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாகவும், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படியும் மாவட்ட எஸ்பி சக்தி கணேசனிடம் மனு அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "நான் ரீடா பேசறேன்.. பெருந்துறையில் இருந்து கோயம்புத்தூருக்கு போகக்கூடிய ராஜா பஸ்ல போய்ட்டு இருந்தேன். அப்போ ஒரு பையன் எனக்கு சீட் தந்தான். அப்போது கண்டக்டர் எனக்கு பாலியல் தொல்லை தந்தார்.

அடிக்க வந்தார்
இதை நான் கேட்டதுக்கு "இது"ன்னு என்னை சொல்லி தேவையில்லாததை எல்லாம் பேசினார். ஏன் இப்படி மரியாதை இல்லாமே பேசறீங்கன்னு நான் கேட்டேன். உங்களை வாடா, போடான்னு கூப்பிட்டா நீங்க ஏத்துப்பீங்களான்னு கேட்டேன். அதுக்கு என்னை அடிக்க வந்துட்டார்.

கொச்சையா பேசினார்
அதுக்கப்பறம் என் குடும்பத்துல இருக்கிற பாட்டி, அம்மான்னு எல்லாரையும் தேவையில்லாம கெட்ட வார்த்தையில் பேசினாரு. பேசினது மட்டுமில்லாம, நீ என்னை என்ன பண்ணிடுவேன்னு கொச்சையா கேட்டாரு. என்னை மான பங்கப்படுத்திட்டாரு.

கோரிக்கை
ஆனால் பப்ளிக் யாருமே இதுக்கு ஒரு வார்த்தைகூட பேசலை. என்னுடைய ஒரே கோரிக்கை என்னன்னா, அந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கணும். அதுக்காகதான் நான் மனு தர வந்திருக்கேன். அவர் இனிமே இந்த தவறை செய்யக்கூடாதுன்றதுதான் என்னுடைய கோரிக்கை" என்றார்.

விசாரணை
கண்டக்டர் மீது திருநங்கை புகார் அளித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பஸ்ஸின் டிரைவர், கண்டக்டரை மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அப்போது டிரைவரும், கண்டக்டரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

நன்றி
இமேல் திருநங்கைகள் பஸ்ஸில் பயணம் செய்தால், அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதாகவும் ரெண்டு பேரும் ஒப்புதல் தந்தனர். திருநங்கைதானே என்று அலட்சியமாக நினைக்காமல், கொடுத்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு திருநங்கைகள் நன்றி சொன்னார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications