ஈரோட்டில் குழந்தை தந்த தாய்.. சேலத்தில் பணம் கொடுத்த பெண்.. லட்சம் லட்சமாய் அள்ளிய தம்பதி? என்ன நடக்குது?
ஈரோடு: வசூல் செய்த 5 லட்சம் பணத்துடன், ஊழியர் மோகன் ராஜ் ஓடிவிட்டார் என்று உரிமையாளர் புகார் செய்தார்.. ஆனால், இந்த புகாரை மறுத்து, மோகன்ராஜ் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் தந்தார்.. இறுதியில் மோகன் ராஜூக்கே இது வினையாகிவிட்டது.. ஈரோடு , சேலம் மாவட்டத்தில் நடந்த சம்பவம், மிகப்பெரிய அதிர்ச்சியை அம்மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.. என்ன நடந்தது? யாரிந்த மோகன்ராஜ்?
சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.. 44 வயதாகிறது.. இவர் குகை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பைனான்ஸ் கம்பெனியில், பணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார்.. பிறகு திடீரென வேலையை விட்டு நிற்பதாக, பைனான்ஸ் கம்பெனி ஓனரிடம் சொல்லிவிட்டு நின்றுவிட்டார்.

இதனிடையே, பணத்தை வசூலிக்கும்போது, அதில் மோகன்ராஜ் மோசடி செய்துவிட்டதாக கூறி, கம்பெனி ஓனர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின்பேரில் விசாரணையும் நடந்தது.. அதில், ரூ.5 லட்சம் பணத்தை வசூல் செய்து அதை திருப்பி தராமல், வேலையிலிருந்து நின்றுவிட்டதால், அந்த 5 லட்சத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.
வசூலித்த பணம்
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ், போலீஸ் கமிஷனர், கலெக்டரிடம் பரபரப்பு புகார் ஒன்றை தந்துள்ளார்.. அதில், "நான் வசூலிக்காத பணத்தை வசூலித்ததாகவும், இந்த தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என எழுதி வாங்கியதுடன், காசோலையிலும் கையெழுத்து பெற்றுக்கொண்டு மிரட்டுகிறார்கள்" என்று பைனான்ஸ் கம்பெனி உரிமையாளர் உள்பட 3 பேர் மீது குற்றம் சாட்டினார்.
மோகன்ராஜ் அளித்த இந்த புகாரை போலீசார் விசாரித்தபோது, வேறு ஒரு சம்பவத்தில் மோகன்ராஜே சிக்கிவிட்டார்.. அதாவது, மோகன்ராஜ், அவரது நாகசுதா இருவரும், குழந்தை விற்பனை கடத்தல் கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டது அம்பலமானது..
ஈரோடு பெண் - ஆண் குழந்தை
1 மாதத்துக்கு முன்புகூட, ஈரோட்டை சேர்ந்த பெண்ணிடம், ஆண் குழந்தையை மோகன்ராஜ், தம்பதியினர் 4 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.. இந்த தம்பதிக்கு குமாரபாளையம் ஸ்ரீதேவி, ஈரோடு பர்வீன், பத்மாவதி, ஜனார்த்தனம் ஆகியோர் உடந்தையாகவும் செயல்பட்டுள்ளனர்..
குழந்தையின் தாய்க்கு 4 லட்சம் தந்துவிட்டு, அந்த குழந்தையை சேலத்தை சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியிடம் ரூ.7 லட்சத்திற்கு மோகன்ராஜ் விற்றிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.. இதையடுத்து, சேலம் தம்பதியிடமிருந்து அந்த குழந்தையை போலீசார் மீட்டனர்.
3 பேர் உடந்தை
இப்போது ஈரோட்டில் ஆண் குழந்தையை விற்பனை செய்த தாய், சேலத்தில் குழந்தையை விலைக்கு வாங்கிய தாய், குழந்தையை விற்பனை செய்த தம்பதி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த 3 பேர் என மொத்த பேரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. குழந்தை விற்பனை கும்பலை சேர்ந்த 6 பேர் கைதாகி உள்ள நிலையில், இவர்கள் மீது ஏற்கனவே வழக்குகளும் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல, சேலம் பனைமரத்துப்பட்டியை சேர்ந்த சித்ரா என்ற பெண்ணும், ஈரோட்டை சேர்ந்த பாலு என்பவரும், பெண் குழந்தையை விற்பனை செய்வதில் தொடர்பில் இருந்ததால், சித்ரா, பாலு இருவருமே கைதாகி உள்ளனர்.. அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
வாட்ஸ்அப் குரூப்
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "கைதான நபர்கள், அனைவருமே வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு வைத்துக்கொண்டு, வறுமையில் இருப்போரை கண்டறிந்து அவர்களிடம் பணத்தாசை காட்டி குழந்தைகளை வாங்கி, அதிக பணம் தருபவர்களிடம் விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.
அந்தவகையில்தான், ஈரோட்டில் ஆண் குழந்தையை விற்ற பெண் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.. இந்த பெண் மிகவும் வறுமையில் வாடுபவர்.. அவரது கணவரும் இறந்துவிட்டார்.. இந்த பெண்ணுக்கும் கேன்சர் நோய் தாக்கி உள்ளது.. ஏற்கனவே 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.. இப்பெண்ணின் வறுமை + கேன்சர் நோய் + நிதி நெருக்கடி போன்றவற்றை பயன்படுத்திதான், ரூ.4 லட்சத்தை தந்து குழந்தையை விலைக்கு வாங்கியிருக்கிறது இந்த கும்பல்' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications