ஈரோடு கிராம நிர்வாக அதிகாரி ஜெயசுதா.. பட்டா கேட்டு வந்த பெண்ணால்.. இப்படி போய் சிக்கிட்டாரே
ஈரோடு: ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்த ஜெயசுதா என்பவர் புங்கம்பாடியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவரிடம் மஞ்சுளா என்பவர், புதிதாக வாங்கிய இடத்துக்கு தனது பெயரில் பட்டா மாறுதல் செய்யக்கோரி விண்ணப்பித்துள்ளார். அப்போது ரூ.2,500 லஞ்சம் கேட்டாராம் விஏஓ ஜெயசுதா.. இதனை கொடுக்க விரும்பாத மஞ்சுளா விஏஓவை கையும் களவுமாக சிக்க வைத்திருக்கிறார். எப்படி விஏஓ சிக்கினார் என்பதை பார்ப்போம்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்வதற்காகவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்ற பிரிவு ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர், காவலர்கள் என தனி காவல் நிலையத்துடன் செயல்படுகிறது.

அந்த மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் யார் லஞ்சம் கேட்டாலும், லஞ்சம் கொடுத்தால் தான் பணிகளை முடித்து தருவேன் என்று பிடிவாதம் பிடித்தாலும் புகார் தெரிவிக்கலாம். அப்படி புகார் தெரிவித்தால், புகாரின் உண்மை தன்மையை உறுதி செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து விஏஓ, தாசில்தார், சர்வேயர், ஆர்டிஓ, சார் பதிவாளர், காவல்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் என எந்த துறை அதிகாரிகளையும் கைது செய்வார்கள்.
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் அதிகாரிகள் அடுத்த 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். அதேபோல் லஞசம் வாங்கி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அடிக்கடி நீதிமன்றத்தில் ஆஜராவதுடன், குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க வேண்டும்.
நிரூபிக்க முடியாவிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்குள்ளாக வாய்ப்பு அதிகமாக உள்ளது. குற்றத்தின் தன்மையை பொறுத்து சிறை தண்டனை மாறுபடுகிறது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் மட்டுமல்ல.. லஞ்சப்பணத்தில் கோடிகளில் சொத்து சேர்த்தது தெரியவந்தாலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்வார்கள்.
இந்நிலையில் ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் விஏஓ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்த 48 வயதாகும் ஜெயசுதா (வயது 48). இவர் சென்னிமலை அருகே உள்ள புங்கம்பாடியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பெருந்துறையை சேர்ந்த மஞ்சுளா (48) என்பவர், தான் புதிதாக வாங்கிய இடத்துக்கு தனது பெயரில் பட்டா மாறுதல் செய்யக்கோரி ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் புங்கம்பாடி கிராம நிர்வாக அதிகாரி ஜெயசுதாவை சந்தித்தாராம். அப்போது அவரிடம் பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ.2 ஆயிரத்து 500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஜெயசுதா கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் லஞ்சம் பெறுவதற்கு ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி நகரை சேர்ந்த பூபதி (40) என்பவரும் ஜெயசுதாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே லஞ்சம் கொடுக்க விரும்பாத மஞ்சுளா, ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் சென்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மஞ்சுளாவிடம் கொடுத்தனர். அந்த பணத்தை புங்கம்பாடியில் கிராம நிர்வாக அதிகாரி ஜெயசுதாவை சந்தித்து மஞ்சுளா கொடுத்தார். அப்போது பணத்தை ஜெயசுதா பெற்றுக்கொண்டதும், மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று கையும், களவுமாக அவரையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பூபதியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications